பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர் !

cinema news
0
(0)

 

இந்த ஆண்டில் ரசிகர்களிடம்  பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  முக்கியமான படங்களின் ஒன்றான “காத்து வாக்குல ரெண்டு காதல்”  படத்தின் அழகான  டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க,  இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா,சமந்தா என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கூட்டணி இணைந்து நடித்திருக்கும் படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”. ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே, ரசிர்களிடம் எக்கசக்க எதிர்பார்ப்பு  நிலவி வருகிறது. இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான மூன்று  பாடல்களும் அனைத்து தரப்பினரிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பம்பர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு,  வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காதல் காமெடி படங்கள் இல்லையெனும் ஏக்கத்தை போக்கும் படி, நீண்ட இடைவேளைக்கு பிறகு, பெரும் நட்சத்திர கூட்டணியில், அழகான காதல் கவிதையாக, மனம் விட்டு சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரித்துள்ளார்.இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.