மூன்றாம் பிறை 40 ம் ஆண்டு கொண்டாட்டம்

cinema news
0
(0)

விழா சிறப்பு மலரில் வாசகர்களும் பங்கேற்க வாய்ப்பு:பாலுமகேந்திரா நூலகம் அறிவிப்பு

வணக்கம்,

சத்யஜோதி தியாகராஜன் அவர்கள் தயாரிப்பில் உலகநாயகன் கமல் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையில் பாலுமகேந்திரா அவர்களின் இயக்கத்தில் 1982 ல் வெளியான மூன்றாம்பிறை தமிழ் சினிமாவின் மகத்தான காவியங்களுல் ஒன்றாக இன்றும் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறது. . ஒட்டு மொத்த இந்தியாவையே தமிழ் சினிமாவை நோக்கி திரும்,பிப் பார்க்க வைத்த இந்த பெருமைமிகு திரைக்காவியம் வரும் பிப்ரவரி 19 ம் தேதியோடு நாற்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ..

இந்த பெருமை மிகு நிகழ்வை கொண்டாடும் வகையில் பாலு மகேந்திரா நூலகம் இயக்குனர் வெற்றிமாறன் தலைமையில் ஒரு சிறப்பு மலரை கொண்டு வரத்திட்டமிட்டிருக்கிறது .இந்த மலரில் படத்தில் இடம்பெற்ற நடசத்திரங்கள் தொழில் நுட்ப, கலைஞர்களின் அனுபவ பகிர்வுகளுடன் படத்தை வெற்றிப் படமாக்கிய பார்வையாளர்களின் பங்களிப்பும் இடம் பெற விரும்புகிறோம் அதன் பொருட்டு மூன்றம் பிறை படத்தை தியேட்டரில் வெளிவந்த காலத்தில் அதை பார்த்த அனுபவத்தை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரையாக எழுதி அனுப்பவேண்டும்.

இக் கட்டுரையோடு படம் பார்த்த திரையரங்கம், .. ஊர் மற்றும் தங்களது தற்போதைய அன்றைய மற்றும் இன்றைய புகைப்படத்துடன் கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன .. தேர்வு செய்யப்படும் .பிரசுரத்துக்கு தகுதியான சிறந்த கட்டுரைகளுக்கு தலா ஐயாயிரம் ருபாய். பரிசளிக்கப்படும் . மட்டுமல்லமால் படம் வெளியான அரங்கம் அல்லது சுவரொட்டியுடன் உங்கள் புகைப்படம் இருந்தால் அதற்கும் சிறப்பு பரிசுகள் உண்டு. ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்பலாம் உங்கள் கட்டுரையை கீழே கொடுக்கப் பட்டுள்ள பாலு மகேந்திரா நூலக முகவரிக்கு தபால் மூலமகவோ அல்லது ஈ மெயில் முகவரி வழி இணையம் வழியிலோ அனுப்பலாம் புகைப்படங்கள் கட்டுரைகள் தெளிவாக இல்லாமல் இருநதால் பிரசுரத்துக்கு ஏற்கப்பட மாட்டது .இறுதி தேதி 12–02—2022.

பாலு மகேந்திரா நூலகம், மலாட்சுமி அடுக்ககம் , 4வது தெரு அன்பு நகர்
வளசரவாக்கம் சென்னை

\Email: balumahendralibrary@gmail.com

பேச: 9884060274

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.