டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்  “கனா காணும் காலங்கள்”  தொடருக்காக,  இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் சிறப்பு ஆந்தம்  பாடல்,  சோனி மியூசிக் யூடுயூப் தளத்தில் வெளியாகியுள்ளது. 

cinema news
சென்னை, ஜூலை 15, 2022: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தலைமுறை தாண்டி ரசிகர்களை அசத்தி வரும்,  “கனா காணும் காலங்கள்” தொடரின் புதிய சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தொடர் அதன் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான இசை விருந்தை அளித்துள்ளது. இத்தொடருக்காக மகிழ்ச்சியான மற்றும் வேடிக்கை நிறைந்த  பள்ளி நினைவுகள் போற்றும்  ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் தீம் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு    சிறந்த இசை இயக்குநர்களில் ஒருவரான ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஆதித்யா ஆர்.கே பாடியுள்ளார், பிரபல பாடலாசிரியர் ஜி.கே.பி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இந்த பாடல்  பள்ளி வாழ்க்கையின் அழகிய தருணங்களை நினைவுபடுத்தும், மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். சோனி மியூசிக் சவுத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட இந்த பாடல், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘கனா காணும் காலங்கள்’ தொடர்  வெறும் நிகழ்ச்சி என்பதை தாண்டி பள்ளி வாழ்வின் நினைவுகளை கிளறும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஒரே வகையிலான சீருடைகள், பளபளப்பான காலணிகள் அணிந்து, கேண்டீனில் பொழுதை போக்கும் மறக்க முடியாத தருணங்கள், நண்பர்களுடனான சேட்டைகள்,  என பள்ளிக்கால நினைவுகளை கிளறி அந்த ஞாபகங்களுக்கு, இத்தொடர் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. நம் பள்ளி வாழ்க்கையின் அன்பான பகுதியாக இருக்கும் பிரிக்க முடியாத நட்புகள், தண்டனைகள் மற்றும் குறும்புகள் அனைத்தும் வெவ்வேறு பின்னணியில் இருந்து நம்மை ஒன்றிணைக்கிறது. இது ரசிகர்களை நிகழ்ச்சியுடனும், அதன் பிரபலமான கதாபாத்திரங்களுடனும் ஆழமாக இணைக்கிறது.

கனா காணும் காலங்கள் தொடர் இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், புதிய எபிசோடுகளுடன் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.