900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..!

News
0
(0)

வணக்கம்,

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் EX.M.P. அவர்களின் ஆதரவில் கடந்த முறை பாண்டவர் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பாண்டவர் அணியின் பழி வாங்கும் செயலும், நாடகக் கலைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை செய்து முடிக்காததாலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினாலும், துணை நடிகர்களை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அவர்களை மிகவும் துன்புறுத்தியதாலும், பாண்டவர் அணிக்கு அளித்த ஆதரவை ஜே.கே.ரித்தீஷ் அவர்கள் வாபஸ் பெற்றார்.

பாண்டவர் அணி மீது தான் நம்பிக்கை வைத்து தவறு செய்து விட்டதாக மிகவும் வருத்தப்பட்டார்.

இன்று பாண்டவர் அணி – சுவாமி சங்கரதாஸ் அணிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. மறைத்திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆதரவாளர்கள் நண்பர்கள் என சுமார் 900 உறுப்பினர்கள் உள்ளனர். நடிகர் சங்க உறுப்பினர்கள் 3000 பேரில் 900 உறுப்பினர்கள் எங்களின் ஆதரவில் உள்ளதால் ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆதரவு உள்ள அணியே வெற்றி பெறும் .

இது ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் அன்பு கோட்டை. அவர் வழியில் நானும் எனது நண்பர்களும் இணைந்து ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைக்கு இணங்க ஏழை எளிய மக்களின் நண்பனாகவும், நாடக நடிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றக் கூடியவரும் மனித நேயம் கொண்டவரும், நடிகர் சங்க கட்டிடத்திற்கு பல கோடி ரூபாய் நன்கொடை தந்து நடிகர் சங்க கட்டிடம் கட்ட முதல் செங்கல் எடுத்துக் கொடுத்தவரும், நடிகர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி, இலவச மருத்துவம், இலவச சட்ட ஆலோசனைகளை எந்த வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் பல ஆண்டுகளாக செய்து வரும் நடிகர், தயாரிப்பாளர், கல்வித்தந்தை, சிறந்த மனிதர் உயர் திரு. ஐசரி கணேஷ் அவர்களின் அணியான சுவாமி சங்கரதாஸ் அணிக்கு எங்களது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுத்து மறைத்திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசை நிறைவேற தலைவர் திரு.கே.பாக்கியராஜ், பொதுசெயலாளர் திரு.ஐசரி கணேஷ், பொருளாளர் திரு.பிரசாந்த், மற்றும் துணை தலைவர்கள் திரு.A.L.உதயா, திருமதி. குட்டி பத்மினி ஆகியோரை அணைத்து நல்லுள்ளங்களின் ஆசையோடு மாபெரும் வெற்றி அடையச்செய்வோம்.

இது ஆண்டவன் மீது சத்தியம்.

அன்புடன்

ஜெ.எம்.பஷீர்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.