full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

65 நாட்கள்.. 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்த ‘துரிதம்’ படக்குழுவினர்

 

இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம். கதையின் நம்பகத்தன்மைக்காக தமிழ்நாட்டில், அதுவும் கதை நிகழும் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே பயணப்பட்டு மொத்த படப்பிடிபையும் நடத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 65 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக தமிழகத்துக்குள்ளேயே 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சாலைகளில் மட்டுமே பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். படத்தின் கதை விறுவிறுப்பாக நகரும் விதமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் விதமாக படத்திற்கு ‘துரிதம்’ என்றே தலைப்பும் வைத்துள்ளனர்.

எல்லோருக்குமே தாங்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் சரி என்பது போலத்தான் தெரியும்.. ஆனால் அடுத்தவர்கள் பார்வையில் அது தவறாக தெரிய வாய்ப்பு உண்டு. இந்த கருத்தை மையப்படுத்தி உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை தழுவி இந்த துரிதம் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சீனிவாசன். இவர் இயக்குனர் ஹெச்.வினோத்தின் சீடர்.. குருவை போலவே இந்தப்படத்தை விறுவிறுப்பு குறையாமல் இயக்கியுள்ளார்.’சண்டியர்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெகன் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் கதை மீதுள்ள நம்பிக்கையால் இந்தப்படத்தின் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

 

கதாநாயகியாக மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற ஈடன் நடித்துள்ளார் இவர் ஏற்கனவே, ‘இருக்கு ஆனா இல்ல’, ‘பனி விழும் நிலவு’ உள்ளிட்ட சில தமிழ் படங்கள் மற்றும் மலையாளம் தெலுங்கு மொழிகளில் ஏற்கனவே நடித்துள்ளார்., கதாநாயகியின் தந்தையாக இயக்குனர் ஏ.வெங்கடேஷ், நாயகனின் நண்பனாக பாலசரவணன் மற்றும் பூ ராமு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை  மணி என்பவர் வடிவமைத்துள்ளார். அதுமாட்டுமல்ல மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதி இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை உடனிருந்து கவனித்து மேற்பார்வை செய்து உதவியுள்ளார்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள் ;

‘சண்டியர்’ ஜெகன், ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு, ராமச்சந்திரன் (ராம்ஸ்) மற்றும் பலர்

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு ; ஜெகன்
இயக்கம் ; சீனிவாசன்
இசை ; நரேஷ்
ஒளிப்பதிவு ; வாசன்
படத்தொகுப்பு ; நாகூரான்
ஆக்சன் ; மணி