full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சீயான் ’விக்ரமின் ‘மகான்’ படத்திலிருந்து ‘போனா போவுறான்னு..’ எனத் தொடங்கும் புதிய பாடல் வெளியானது

மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘மகான்’. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் அறுபதாவது திரைப்படமான ‘மகான்’ படத்திலிருந்து மூன்றாவது பாடலாக ‘போனா போவுறான்னு..’ எனத் தொடங்கும் பாடல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பாடல் தமிழைத் தவிர தெலுங்கில் ‘போதே போனி..’ என்றும், மலையாளத்தில் ‘வேண்டா வேண்டா என்னு…’ என்றும்,   கன்னடத்தில் ‘ ஹோட்ரே ஹோக்லி அன்டே..’ என்றும் இந்தப்பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். நீங்கள் யாரையாவது விரும்பும்போது அவர்கள் உங்களை விரும்பவில்லை என்றால், அவர்களை விடுவித்து விடுங்கள் என்பதை நுட்பமான செய்தியுடன் கூடிய பாடலாக ‘போனா போவுறான்னு..’ என்ற பாடல் அமைந்திருக்கிறது.

‘சீயான்’ விக்ரம் நடித்திருக்கும் ‘மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. கன்னடத்தில் இந்தப் படத்திற்கு ‘மகா புருஷா’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
மகான் = தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதன்போது அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதை பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக ‘மகான்’ உருவாகியிருக்கிறது. எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது ‘மகான்’ படத்தின் திரைக்கதை.