சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பது காலம் காலமாக இருந்து வந்த மரபு.ஆனால் பொங்கல் நாளே தமிழ் புத்தாண்டு என்று 2008ல் திமுக அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவுடன் 2012ஆம் ஆண்டு சித்திரை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு என்ற நடைமுறையை அறிவித்து அதை விழாவாக கொண்டாடினார் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா.
இதற்கான விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றபோது விழாவுக்கு தலைமை வகித்தவர் அப்போது சபாநாயகராக இருந்த அமைச்சர் ஜெயக்குமார். நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றுவதற்காக வந்தபோது, தாயுள்ளம் கொண்ட தலைவிக்கு தமிழ் மலர்களை கொண்டு வாழ்த்து சொல்ல விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார், அரங்கம் அமைதியாக இருந்தது.
சபாநாயகர் ஜெயக்குமார், சங்க இலக்கியங்களில் குறிஞ்சிப் பாட்டில் வரும் முழுக்கமுழுக்க தமிழ் மலர்கள் 99 தமிழ் மலர்களை படிக்க ஆரம்பித்தார்.
அனில்,ஆம்பல்,அனிச்சம்,குவளை,குறிஞ்சி,வெட்சி,செங்கோடுவேரி,தேமாம்,மணிச்சிகை(செம்மணிப்பூ),உந்தூழ்(மூங்கில் பூ), கூவிளம், எறுழம்,சுள்ளி(மராமரப்பூ), கூவிரம்,
வடவனம், வாகை, குடசம்(வெட்பாலை), எருவை(கோரைப்பூ), செருவிளை(வெண்காக்கணம்), கருவிளம் பூ, பயினிப் பூ
வானிப் பூகுரவம் பூ, பசும்பிடி(பச்சிலைப்பூ) வகுளம்(மகிழம்பூ)
காயா,ஆவிரை, வேரல்(சிறுமூங்கில்,சூரல், சிறுபூளை,குறுநறுங்கண்ணி மலர்குருகிலை(முருக்கிலை)மருதம், கோங்கம்,போங்கம்,திலகம்,பாதிரி,செருந்தி மலர்அதிரல்,சண்பகம் கரந்தை,குளவி(காட்டு மல்லி),மா,தில்லை,பாலை, முல்லை, கஞ்சங்குல்லை,பிடவம்,செங்கருங்காலி,வாழை,வள்ளி,நெய்தல்,
தாழைப் பூ…. 53 பெயர்களை படிக்கும்போதே அரங்கம் முழுக்க கைதட்டல் …முதலமைச்சர் ஜெயலலிதா அப்படியே பார்க்கிறார்… வியப்பில் பார்க்கிறார்…
அப்போது சபாநாயகர் ஜெயக்குமார் இன்னும் முடியவில்லை இன்னமும் இருக்கிறது என்கிறபோது மீண்டும் கைதட்டலால் அரங்கம் அதிர்கிறது,மீண்டும் படிக்க ஆரம்பிக்கிறார்….
தளவம்(செம்முல்லைப் பூ),தாமரை,ஞாழல்,மௌவல், கொகுடிப் பூ,சேடல்(பவளமல்லி பூ),செம்மல்(சாதிப் பூ),சிறுகெங்குரலி(கருந்தாமரைக் கொடிப்பூ),
கோடல் (வெண்காந்தள் மலர்), கைதை(தாழம் பூ), வழைப் பூ(சுரபுன்னை), காஞ்சி, கருங்குவளை, மணிக்குலை, பாங்கர், மரவம், தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை,அடுப்பம்,ஆத்தி,அவரை,பகன்றை,பலாசம்,பிண்டி,வஞ்சி,பித்திகம், சிந்துவாரம்(கருநொச்சிப்பூ),தும்பை,துழாய்,தோன்றி,நந்தி, நறவம்,புன்னாகம்…
இந்த நேரத்தில் மீண்டும் முதலமைச்சர் பயங்கரமாக சிரித்து மகிழ்கிறார்…அரங்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர் ….மீண்டும் மீதமுள்ள பூக்களால் அர்ச்சனை செய்கிறார் சபாநாயகர் ஜெயக்குமார்….
பாரம்,பீரம்,குருக்கத்தி, ஆரம்,காழ்வை, புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருநாறி, குருந்தம், வேங்கை, புழகு மலர்…… இத்தனை 99 தமிழ் மலர்களால் எங்கள் தாயை வணங்கி வாழ்த்துகிறேன் என்ற போது பலமாக முதலமைச்சர் ஜெயலலிதா கைதட்டி வாய்விட்டு சிரித்து ஜெயக்குமாரை வெகுவாக பாராட்டினார்…. அமைச்சர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் விழாவுக்கு வந்த பொதுமக்கள் அனைவரும் சபாநாயகர் ஜெயக்குமாரின் தமிழ் ஆர்வத்தையும் முதல்வர் மீது அவர் கொண்டிருந்த பாசத்தையும் கண்டு மனதார வாழ்த்தினர்…