full screen background image
Search
Monday 25 November 2024
  • :
  • :
Latest Update

இன்றைய முக்கிய செய்திகள் 1/8/2017

• தமிழக அரசு அப்பீல் தள்ளுபடி- மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் இடஒதுக்கீடு செல்லாது: ஹைகோர்ட்
• தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது!
• ஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்தாகும்… வருகிறது அடுத்த செக்!
• முரசொலி பவள விழா.. பிரதமர் மோடி வாழ்த்து
• அறவழியில் போராடிய என்எல்சி தொழிலாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதா? வேல்முருகன் கண்டனம்
• தினகரன் கெடு… அதிமுக அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஈபிஎஸ் நாளை ஆலோசனை
• அஜித் நடித்த விவேகம் திரைப்படம் ஆக. 24ம் தேதி ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
• மதுரை-சிங்கப்பூர் நடுவே ஏர் இந்தியா விமான சேவைக்கு ஒப்புதல்: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
• மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% இடஒதுக்கீடு செல்லாது… சுப்ரீம் கோர்ட்டை அணுக தமிழக அரசு முடிவு!
• அரசாணையில் இடம்பெற்றுள்ள தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது: காமராஜ்
• ‘கக்கூஸ்’ ஒரு சமூகத்தை இழிவுபடுத்துகிறது.. திவ்யபாரதி மீது புதிய தமிழகம் கட்சியினர் போலீசில் புகார்
• அடுத்த கட்ட நடவடிக்கை.. ஆகஸ்ட் 5ல் பதில் தருவார் டிடிவி தினகரன்: வெற்றிவேல் எம்எல்ஏ
• இதை எப்படி குடிப்பது… எண்ணெய் கலந்த தண்ணீரை ஸ்டாலினிடம் காட்டி கதிராமங்கலம் பெண்கள் கண்ணீர்
• குட்கா லஞ்ச விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை அவசியம்: சென்னை உயர்நீதிமன்றம்
• அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய ஜாங்கிட்டுக்கு பதவி உயர்வா? சென்னை ஹைகோர்ட் இடைக்காலத் தடை
• நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா.. நட்டாவை சந்தித்து விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை
• டெங்கு காய்ச்சல் பாதிப்பு.. 7 பேர் மருத்துவமனையில் அனுமதி.. மதுரையில் பீதி
• பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு .. அமைச்சர் சிவி சண்முகம்
• கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு பாஜக, புதிய தமிழகம் நிர்வாகிகள் கொலை மிரட்டல்
• அப்துல் கலாம் நினைவிடத்தில் போட்டோ எடுக்க தடை.. பார்வையாளர்கள் ஏமாற்றம்
• மேகதாதுவில் அணைக் கட்டினால்.. கர்நாடக அரசைக் கலையுங்கள்.. அன்புமணி ஆவேசம்
• நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடிட்டு கள்ளுக் கடையைத் திறப்போம்.. கமுதியில் சீமான் அதிரடி
• ஹோட்டலுக்கு போனால் ஜிஎஸ்டி.. வீட்டில் சமைக்கலாம்னா காஸ் மானியம் ரத்து.. மக்கள் குமுறல்
• ஆக., 5ல் அதிமுக அலுவலகத்துக்கு வாருங்கள்: நிர்வாகிகளுக்கு தினகரன் அழைப்பு
• மாதம் 8,334க்கு மேல் சம்பளம் வாங்கினால் ரேஷன் பொருட்கள் கிடையாது
• நெடுவாசலில் 111வது நாளாக போராட்டம்: கண்டுக்கொள்ளாத மத்திய, மாநில அரசுகள்
• சிலிண்டருக்கான மானியத்தை அடுத்தாண்டு மார்ச் மாத இறுதியுடன் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு – சிலிண்டருக்கு மாதம் 4 உயர்த்த அனுமதி
• கதிரமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற கோரி 73வது நாளாக போராட்டம்
• அருணாச்சல், காஷ்மீர், சிக்கிமை தொடர்ந்து உத்தரகண்டிலும் ஊடுருவியது சீன ராணுவம்
• 2019ல் மோடியை எதிர்க்கும் வலிமை யாருக்கும் கிடையாது: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேட்டி
• 2019 தேர்தலிலும், பிரதமர் மோடி தலைமையில் பாஜகவே ஆட்சியை பிடிக்கும்: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து.
• பணி நாட்கள் குறைக்கப்பட்டதை கண்டித்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்: சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி.
• சேமிப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு: எஸ்பிஐ
• நியமிக்கப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில் வெள்ளை மாளிகையின் தகவல் இயக்குநர் ராஜினாமா
• அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழக்கம் போல் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ்
• விஜயபாஸ்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின்
• ஆகஸ்ட் 16- இல் புதுச்சேரி-ஐதராபாத் விமான சேவை தொடக்கம்: விமான நிலையத்தில் அமைச்சர் மல்லாடி ஆய்வு
• கட்சி பொறுப்பில் இருந்து விலகும் கேள்விக்கே இடமில்லை: அமித் ஷா
• அமைச்சர் மீதான குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிடுக! ராமதாஸ் வலியுறுத்தல்
• பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி துரதிருஷ்டவசமானது” நிதிஷ் குமார் முடிவுக்கு சரத் யாதவ் எதிர்ப்பு
• குஜராத் எம்.எல்.ஏ.க்கள் விலை பேசப்பட்ட விவகாரம்: பாராளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளி
• அமித் ஷாவின் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் – ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்
• கலாம் நினைவிடத்தில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு தடை
• பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றில் படிந்துள்ள சாம்பல் கழிவுகளை அகற்ற உத்தரவு
• டி.ஐ.ஜி. ரூபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கர்நாடக முதல்-மந்திரிக்கு அ.தி.மு.க. கடிதம்
• நாடாளுமன்ற உறுப்பினர் ஆனாலும் அமைச்சராக மாட்டேன் – அமித் ஷா
• உணவையும், சாதியையும் பாஜக ஒன்றாக கலக்குகிறது – அகிலேஷ் யாதவ்
• யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.1 கோடி அபராதம் விதித்துள்ளது.
• வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 5 வரை நீட்டிப்பு
• பசு பாதுகாப்பு என கும்பல் தாக்குதலில் ஈடுபடும் இயக்கங்களுக்கு பா.ஜனதா ஆதரவு – புள்ளி விவரங்களுடன் மக்களவையில் காங்கிரஸ் ஆவேசம்
• அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இன்று அவசர கூட்டம் இரு அணிகள் இணைப்பு, டி.டி.வி.தினகரன் வருகை குறித்து ஆலோசனை
• சினிமா படப்பிடிப்புகள் இன்று வழக்கம் போல் நடைபெறும் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
• காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஞானபிரகாச மடத்தின் மடாதிபதி மாயமானது குறித்து நித்யானந்தாவின் சீடர்களிடம் போலீசார் விசாரணை
• மலேசியாவில் எம்.ஜி.ஆர். உருவச்சிலை அடுத்த மாதம் திறப்பு விழா
• பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காலா, மெர்சல் படப்பிடிப்பு ரத்து