கடந்த ஒரு வாரமாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த திரையரங்க கட்டண உயர்வு பிரச்சனையில் முக்கியமான முடிவுகளை தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது.
இந்த முடிவுகளைத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது அறிக்கையில் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அதில்,
* நாளை முதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும்.
* கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்.
* அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்.
* தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்.
* பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது.
* விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
* மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவுகள் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாகியுள்ளது.