full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

”மனிதமே எங்கள் மதம்” – விஜய் தந்தை பேச்சு!

மெர்சல் திரைப்படத்தின் விவகாரத்தில் நடிகர் விஜயை நோக்கி மத ரீதியில் திசை திருப்பப்படும் வேளையில், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது..

“நான் ஒரு கிறிஸ்தவன்.. என் மனைவி ஒரு இந்து. எங்களுக்குப் பிறந்த விஜய் எந்த மதமாக இருக்க முடியும்?? நான்கு வயதில் விஜயை பள்ளியில் சேர்க்கும் போதே மதம், சாதி என அனைத்துப் பகுதிகளிலும் “இந்தியன்” என்றே குறிப்பிட்டு சேர்த்தோம். விஜய், ஒரு மனிதனுக்கும் ஒரு மனுஷிக்கும் பிறந்த ஒரு மனிதன்.

அந்த வகையில், மனிதமே எங்கள் மதம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.