திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும் போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை” என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை நடிகர் அரவிந்த்சாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது,
“நான் எங்கே, எப்போது தேசிய கீதம் ஒலித்தாலும் எழுந்து நின்று மரியாதை செய்கிறேன். அதே நேரத்தில் கூட சேர்ந்து தேசிய கீதத்தைப் பாடவும் செய்கிறேன். அதை பெருமைக்குறிய ஒன்றாகவே கருதுகிறேன்.
திரையரங்குகளில் மட்டும் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்வதன் அவசியம் என்ன என்று எனக்கு புரியவில்லை. திரையரங்குகளில் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்யும் நீங்கள் அரசு அலுவலகங்கள், சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் இவற்றில் எல்லாம் தேசிய கீதத்தை தினந்தோறும் ஒலிக்கச் செய்யாதது ஏன்??” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.