மனக் கவலையில் பிக்பாஸ் பிரபலம்!!

News

பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாள் முதலே சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் 100 நாள் வரை பட்டையை கிளப்பிய நிகழ்ச்சி “பிக் பாஸ்”. உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பல பிரபலங்களையும் அவரவர் நடந்துகொண்ட விதங்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காரசாரமாக விமர்சித்தும், அளவிற்கு அதிகமாக பாராட்டியும் வந்தனர்.

அதில் ரசிகர்களால் அதிகமாக விமர்சிக்கப் பட்டவர்கள் ஜூலி, காயத்ரி மற்றும் சக்தி ஆகியோர் தான். அதிலும் சக்திக்கு “ட்ரிக்கர்” சக்தி என்றெல்லாம் பட்டப் பெயர் வைத்து ரசிகர்கள் படுத்தி எடுத்தனர், ஏன் உலகநாயகனே அந்தப் பெயரை சக்திக்கு நினைவூட்டினார்.

அப்படி இருக்கையில், பிக் பாஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள சக்தி,

”பிக் பாஸில் நடந்தவை யாவும் முழுமையாக காட்டப்படவில்லை. அப்படி காடியிருந்தால் உண்மை மக்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் பிக் பாஸ், நாங்கள் செய்த தவறுகளை வெளியிடும் வேலையை மட்டுமே செய்தார். உள்ளே இருந்த எங்களுக்கும் எது சரி?, எது தவறு? என்று உணரமுடியாமல் போனது. வெளியே வந்ததும் தான் நாங்கள் வேறு மாதிரி காண்பிக்கப்பட்டிருப்பது புரிந்தது. சமூக வளைதலங்களில் நான் விமர்சிக்கப்படுவது குறித்து என் அம்மா தான் மிகவும் கவலைப்பட்டார்” என்றார்.