full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :

கபிலன் வைரமுத்துவைப் பாராட்டிய பாடலாசிரியர்

அருள் சூரியக்கண்ணு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “தட்றோம் தூக்றோம்”.

“தட்றோம் தூக்றோம்” படக்குழுவினர் டீமானிடைசேஸன் ஆந்தம் என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். கடந்த வருடம் நவம்பர் 8 பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒருவருடம் நிறைவடைந்ததை ஒட்டி இந்த வருட நவம்பர் 8ம் நாளை டிமானிடைசேஸன் தோல்வி என்று கருப்பு தினமாக ஒரு சாராரும், வெற்றி என்று கேக் வெட்டி இனிப்பு வழங்கி இன்னொரு சாராரும் அனுசரித்திருக்கிறார்கள். எல்லா சாராருக்கும் என்ன உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியும். அந்த டீமானிடைசேஸன் பற்றிய கீதமாக இந்த பாடலை வெளியிட்டுள்ளார்கள். பாடல் வரிகளை நண்பர் கபிலன் வைரமுத்து எழுதி இருக்கிறார்.

இப்பாடல் குறித்து பாடலாசிரியர் முருகன் மந்திரம், “ஜோக்கர் படத்தில் அண்ணன் யுகபாரதி எழுதிய “என்னங்க சார் உங்க சட்டம்” சமூக பிரச்சினைகளைப்பற்றி பேசியது போல இந்த டீமானிடைசேஸன் ஆந்தம் பாடலின் வரிகளும் மக்கள் பிரச்சினைகள் சார்ந்து பேசுகிறது. இந்த பாடலின் வரிகளை நான் ரொம்பவே ரசித்தேன்.

‘கார்டை ஸ்வைப் பண்ணி நாம் வாழலாம்
கேள்வி கேட்காம கொண்டாடலாம்,
பண்ட பரிமாற்றம் பழகிக்கலாம்
கண்ணே திறக்காம படம் பார்க்கலாம்’

‘டீமானிடைசேஸன்
மாறுமா நம்ம நேஷன்
கேள்வி கேட்டா போலீஸ் ஸ்டேஷன்
இது கோலுமாலு குளோபலைசேஷன்’

இப்படி பாடல் வரிகளை சிறப்பாக எழுதியுள்ளார், நண்பர் கபிலன் வைரமுத்து.

கலை மக்கள் பிரச்சினைகளை நேரடியாக பேசவேண்டும். தேவைப்படும் நேரங்களில் காத்திரமாக பகடி செய்யவேண்டும். கலையின் எந்த வடிவத்தின் மூலமாக அது நிகழ்ந்தாலும் வரவேற்க வேண்டும். அந்த கலைஞர்களையும் பாராட்டவேண்டும். இந்த பாடல் வடிவில் அது இரண்டையும் நிகழ்த்தி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இந்த டீமானிடைசேஸன் ஆந்தம் பாடலை எழுதியுள்ள கபிலன் வைரமுத்து, இசையமைத்துள்ள பாலமுரளி பாலு, பாடியுள்ள நடிகர் சிம்பு, “தட்றோம் தூக்றோம்” படத்தின் இயக்குநர் அருள்.எஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டுகிறேன்.” என்று கூறினார்