full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

மீண்டும் இணைந்த “விர்ஜின் பசங்க” கூட்டணி!

“அடல்ட் காமெடி” ட்ரெண்டிற்கு புள்ளையார் சுழி போட்டவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். “திரிஷா இல்லனா நயன்தாரா” என்று படமெடுத்து இளைஞர்களை “கிளர்ந்தெழச்” செய்தார். முதல் படத்திலேயே இந்த மகத்தான சாதனையை செய்த ஆதிக் ரவிச்சந்திரனின் இரண்டாவது படமாகிய சிம்பு நடித்த “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” திரைப்படத்தை ரசிகர்கள் சரியாக புரிந்துகொள்ளாத காரணத்தினால் வெற்றிபெறாமல் போனது.

இந்த நிலையில், தனது அடுத்த படத்தை சத்தமே இல்லாமல் தொடங்கி முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கிறார் ஆதிக். “த்ரிஷா இல்லனா நயன்தாரா” படத்தின் வெற்றிக் கூட்டணியாகிய ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்.

சாதாரணமாகவே “காட்டு காட்டென்று” காட்டும் ஆதிக், இந்த படத்தை 3டி-யில் வேறு “காட்டப்” போகிறாராம். அதோடு மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகை சோனியா அகர்வால் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

தமிழில் தற்போதைக்கு ரஜினியின் 2.0 மட்டுமே 3டியில் உருவாகி வரும் சூழலில் ஆதிக்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணி 3டியில் படமெடுப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

எது எப்படியோ, ஒரே ஒரு அடல்ட் காமெடி படத்தின் மூலம் இளைஞர்களை “உசுப்பிய” ஆதிக்கின் இந்த 3டி படமும் ரசிகர்களுக்கு “படையலாக” அமையட்டும்.