டைரக்டர் ஹரியிடம் ‘வேங்கை’, ‘சிங்கம்’, ‘பூஜை’ போன்ற படங்களில் அசோஸியேட்டாக பணியாற்றியவர் கே.ஜி.வீரமணி. இவர், ‘டாஸ்மாக்’ எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் போராட்டத்தை திரைக்கதையாக்கி, காதல் காட்சிகளுடன் பொழுது போக்கு அம்சங்கள் கலந்து ஜனரஞ்சகமாக உருவாக்கியிருக்கும் படம் “திறப்பு விழா”.
இதில் புதுமுக நடிகர் ஜெயஆனந்த் கதாநாயகனாகவும், ரஹானா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் மனோபாலா ஜி.எம்.குமார், ‘பசங்க’ சிவக்குமார், ‘ரோபோ’ சங்கர், சூப்பர் குட்லட்சுமணன், சிசர் மனோகர், ‘நாதஸ்வரம்’ முனீஸ், கவிதா பாலாஜி, ரெங்க நாயகி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் விருதாச்சலம், நெய்வேலி, கல்பாக்கம், சென்னை போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. ‘எடிட்டிங், டப்பிங், மிக்ஸிங் வேலைகளும் மும்முரமாக நடந்து முடிவடைந்திருக்கிறது.
ஒளிப்பதிவு – ஆர்.பி.செல்வா, இசை – வசந்த ரமேஷ், எடிட்டிங் – பி.ஜி.வேல், பாடல்கள் – நா.முத்துக்குமார், பழநிபாரதி, நந்தலாலா, ச.ஞானக்கரவேல், நிலம், கலை – எஸ்.எஸ்.மூர்த்தி, மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், நிர்வாகத் தயாரிப்பு – பி.ரத்னவேல்
இப்படத்தை, பூமிகா இன்ப்ராடெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எம்.ஜெரினா பேகம் தயாரித்திருக்கிறார்.
இந்தப்படத்தை மே மாதம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன