அவசியம் கருதியே பேசினேன் – விஜய் சுளீர்!

News

“மெர்சல்” படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்காக நடந்த பிரச்சனைகள் அனைத்தும் நாமறிந்ததே. அந்த பிரச்சனை குறித்து எதுவும் பேசாமல் இருந்து வந்த விஜய்,
விகடன் விருது வழங்கும் விழாவில் மௌனம் கலைத்துள்ளார்.

விகடன் விருது வழங்கும் விழாவில், 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது.இந்த விருதை உலக நாயகன் கமல்ஹாசன் விஜயக்கு வழங்கினார்.

விருதை பெற்றுக் கொண்ட நடிகர் விஜய் பேசியதாவது:

“தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளான இன்று விருது வாங்குவதில் ஒரு தமிழனாக எனக்கு பெருமை.
சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பிடித்ததால் பிரச்னைகளை சந்தித்த மெர்சல் படம் வெளியீட்டின் போது ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்.
சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும். அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன்.மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு
அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.