full screen background image
Search
Wednesday 18 December 2024
  • :
  • :
Latest Update

எழுத்தாளரின் காட்டில் அடைமழைக்காலம்!

எழுத்தாளராக இருந்து சினிமாவிற்குள் கோலோச்சியவர்களில் முக்கியமானவர் சுஜாதா. தமிழ் சினிமாவின் பெரிய இயக்குநர்களின் முதல் தேர்வாக எப்போதுமே அவர்தான் இருப்பார். சுஜாதாவின் மறைவிற்குப் பிறகு அந்த இடத்தை எழுத்தாளர் ஜெயமோகன் பிடித்து விடுவார் போல.

ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய்குமார் இணைந்து நடித்திருக்கும் சங்கரின் “2.0” படத்திற்கு ஜெயமோகன் கதை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் “விஜய்62” படத்திற்கும் ஜெயமோகன் வசனம் எழுதவிருக்கிறார் என தகவல் வெளியானது.

இந்த செய்தி அடங்குவதற்குள், சங்கர் மற்றும் கமல் 22 வருடங்களுக்குப் பிறகு இணையும் “இந்தியன்2” படத்திற்கும் ஜெயமோகன் தான் வசனம் எழுதுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயமோகன் காட்டில் அடைமழைக்காலம் போல இது.