சாய்ராம் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் கமல்ஹாசன், “நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூற வரவில்லை; நீங்கள் வாருங்கள் என்று கூற வந்துள்ளேன். நாடு, படிப்பு, கல்வி கெட்டுப்போச்சு என பேசுவது மட்டும் சரியா? தவறை இன்றே சரிசெய்ய வேண்டும்.
நாட்டு நடப்புகளை தெரிந்துக்கொள்ள வேண்டிய மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இன்று முதல் நாட்டு நடப்பை பாருங்கள் அது உங்கள் கடமை; நான் தனியாக நிற்க மாட்டேன். நீங்கள்தான் நான். நாட்டில் யார் கொள்ளையர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் தண்ணீர் வராததை யார் குறை என மாணவர்கள் சிந்திக்க வேண்டும். மாற்றத்தை உருவாக்க மாணவர்களால் தான் முடியும். குறைகளைக் கண்டறிந்து மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். அமைதியான முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியதில் காந்தியடிகள் எனக்கு பிடித்தமான தலைவர். அம்பேத்காரையும் காமராஜரையும் எனக்கு பிடிக்கும்.
பெரியார், எம்ஜிஆர் ஆகிய தலைவர்களையும் எனக்கு பிடிக்கும். திமுக தலைவர் கருணாநிதியையும் எனக்கு பிடிக்கும்.” என்று கூறினார்.