* ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர்கள் படுகொலை.
* சிரியாவின் அர்பின் பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் 15 பள்ளி குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
* கணவர் நடராஜன் இறுதி சடங்கில் பங்கேற்க சசிகலாவிற்கு 15 நாள் பரோல் வழங்கியது பெங்களூரு சிறை நிர்வாகம்.
* அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் ரத யாத்திரை : நெல்லை மாவட்டம், கோட்டை வாசல் பகுதிக்கு வந்தது ரதம்.
* ரத யாத்திரையால் நெல்லையில் பதற்றம் : சொந்த வேலைக்கு சென்ற பொதுமக்களையும் கைது செய்யும் காவல்துறை.
* தமிழகத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியதற்கு பேரவையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கண்டனம் : மத நல்லிணக்க மண்ணில் ரத யாத்திரையை அனுமதித்தது அரசு செய்த துரோகம் – முக.ஸ்டாலின்.
* ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா ? பாஜக ஆட்சியா ? – முக.ஸ்டாலின் கேள்வி.
* ஐந்து மாநிலங்கள் வழியாக வந்த ரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது. முக.ஸ்டாலின் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம்.
* ரத யாத்திரை விவகாரம் : சட்டப்பேரவை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட முக.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது.
* புதுக்கோட்டை ஆலங்குடி அருகே விடுதியில் உள்ள பெரியாரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது ஆலங்குடி போலீசார் விசாரணை.
* உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சசிகலா கணவர் ம.நடராஜன் காலமானார்.
* ஜெயலலிதா முதலமைச்சராக ம.நடராஜன் தான் காரணம் – அஞ்சலி செலுத்திய பின் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா பேட்டி.
* பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக தமிழக அரசு ஏன் செயல்படுகிறது என்பது தெரியவில்லை: தொல். திருமாவளவன்.
* பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமல் இருக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் ? – அமைச்சர் ஜெயக்குமார்.
* ரத யாத்திரைக்கும் பாஜக , ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி.க்கும் தொடர்பில்லை : அமைச்சர் ஜெயக்குமார்.
* நெல்லையில் விஎச்பி நடத்தும் ரத யாத்திரைக்கு எந்தவித தடையும் இல்லை, பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர் – எஸ்பி அருண் சக்திகுமார்.
* ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடயிருந்த சீமான் , தொல். திருமாவளவன் , ஜவாஹிருல்லா, வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* ராமராஜ்ய ரத யாத்திரை : விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தை கட்சி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் 10 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது.
* தீவிரவாதிகளால் ஒன்பது முறை சுடப்பட்டு மீண்ட சிஆர்பிஎஃப் அதிகாரி சேத்தன் சீட்டா ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தார்.
* தமிழக சட்டப்பேரவை தொடங்கியது பேரவையில் 2-ம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது.
* ம.நடராசனின் மறைவு உள்ளத்தை உலுக்குகிறது – மதிமுக பொதுச்செயளாலர் வைகோ.
* தமிழகத்தை கலவர பூமியாக்கி ஆட்சியை பிடிப்பதே பாஜகவின் திட்டம். பக்தியை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்றுவதே பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளார்ந்த திட்டம் : கி.வீரமணி.
* இந்தியாவிலேயே பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலம் தமிழகம் தான் : தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு.
* மக்களை பிளவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது – இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்.
* நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விஷ்வ ஹிந்து பரிஷித் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்டிபிஐ மறியல், 500-க்கும் மேற்பட்டோர் கைது.