full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :
Latest Update

ஜனாதிபதி இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார்

இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பத்ம விருது வெற்றியாளர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று (மார்ச் 20) பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படுகின்றன.

2018 ம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இளையராஜா உட்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண், கிரிக்கெட் வீரர் தோனி உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண், தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உட்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று(மார்ச் 20) பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக பத்ம விருது வென்றவர்களுக்கு நேற்று இரவு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்து அளித்தார்.