முன்னரெல்லாம் தணிக்கைக் குழுவினரிடம் “A” செர்ட்டிஃபிகேட் வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் கேட்பார்களாம். ஆனால் இப்போதெல்லாம் “ப்ளீஸ் எனக்கு எப்படியாச்சும் “A” செர்ட்டிஃபிகேட் கொடுங்க” என கெஞ்ச ஆரம்பித்து விடுவார்கள் போல.
“ஹர ஹர மஹாதேவ்கி” என்ற “செமி பிட்டு” படம் தந்த உற்சாகத்தில், தாண்டி குதித்து அடுத்ததாக “இருட்டு அறையில் முரட்டு குத்து” என சங்கத் தமிழ் தலைப்போடு பொங்கி வழியும் ஆபாசத்தை படமெடுக்கக் கிளம்பியது அதே குரூப்.
“ஃபர்ஸ்ட் லுக்”, “டீசர்”, “சிங்கிள் டிராக்” என அத்தனையிலும் ஆபாசத்தை மட்டுமே அள்ளித் தெளித்து தனது “கிளு கிளு” மேக்கிங் திறமையை(??) நிரூபித்திருந்தார் இயக்குநர். இதில், “அழுக்கு ஜட்டி அமுதவள்ளி” என்ற பாடலுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது கிடைத்தாலும் கிடைக்கலாம்.
இந்நிலையில், இந்த படத்திற்கு “க்ளீன் A செர்ட்டிஃபிகேட்” கிடைத்து விட்டதாக பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த தயாரிப்பாளர் இது போல “செமி பிட்டு” படங்களை தயாரிப்பதற்கென்றே தனியாக “நீலப் பேய்” என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்திருப்பது தான்.
இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்??