தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அதிகப்படியான பாடல்களை பாடியிருப்பவர்கள் வெகு சில ஹீரோக்கள் தான். அவர்களில் முக்கியமானர்கள் நடிகர் கமலஹாசன், நடிகர் விஜய், நடிகர் சிலம்பரசன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் தான்.
இவர்களில் நடிகர் விஜய் தனது ஆரம்ப கால கட்டங்களில் வெளியான எல்லா படங்களிலுமே ஒரு பாடலை பாடி விடுவார். ஒரு கட்டத்தில் பின்னணி பாடுவதை நிருத்திக் கொண்டார். சில படங்களுக்குப் பிறகு “சச்சின்” படத்தில் ஒரு பாடலை பாடினார்.
அதன் பிறகு ஏழாண்டுகளுக்கு எந்த படத்திலும் பாடாமல் இருந்து வந்தார். பின்னர் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய “துப்பாக்கி” படத்தில் “கூகுள் கூகுள்” என்ற பாடலை பாடினார். அந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. அதன் பிறகு வந்த எல்லா படங்களிலும் ஒரு பாடலை பாடி வந்தார்.
என்ன ஆனதோ, சமீப காலமாக பாடுவதைதவிர்த்து வந்த விஜய் இப்போது உருவாகி வரும் “தளபதி 62” படத்தில் ஒரு பாடலை பாட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுவது இதுதான் முதல் முறையாகும்.