காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு கொடுத்த காலக்கெடு இன்றோடு முடிவடைகிறது. இந்த உச்சகட்ட பரபரப்பில் ஒட்டுமொத்த தமிழகமும் தகித்துக் கொண்டிருக்கிறது.
விவசாய சங்கத்தினர் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் எல்லாம் கடுமையான விமர்சனங்களை மத்திய அரசின் மேலும், மாநில அரசின் மேலும் வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் “காவிரி மேலாண்மை வாரியம்” அமைப்பது குறித்து தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும். I sincerely hope justice will prevail” என்று கூறியுள்ளார்.