full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்புச் செய்திகள் 06/04/18 !

* ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு தெரிவித்து 54 நாளாவது நீடித்து வரும் போராட்டம்.

* காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா எம்பிக்கள் போராட்டம்.

* காவிரி விவகாரம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

* விடுதலைப் புலிகள் பெயரைச்சொல்லி பல இடங்களில் வசூல் செய்து ஏமாற்றுகிறார் சீமான் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

* டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

* காவிரி விவகாரத்தில், விரைவில் நல்ல செய்தி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தேசிய கட்சிகள் இரண்டுமே நமக்கு உதவி செய்யவில்லை – மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.

* தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்புதான் ஆட்சி செய்யும் காவிக்கு இங்கே இடமில்லை.தமிழகத்தின் உணர்வை புரிந்து ஐபிஎல் நடத்தலாமா வேண்டாமா என்பதை பிசிசிஐ முடிவு செய்ய வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்.

* ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி-க்கள் 5 பேர், மக்களவை சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் வழங்கினர்.

* திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் உட்பட 3000 பேர் மீது வழக்கு பதிவு.

* மார்ச் 5-ம் தேதி தொடங்கிய மக்களவை கூட்டத்தொடர் முடிவடைந்தது : நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

* மத்தியப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு அம்பேத்கர் சிலை உடைப்பு.

* மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது : அமைச்சர் கடம்பூர் ராஜு.

* தெலுங்கானா மாநிலம் நலகொண்டாவில் விவசாய வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் ஓடையில் கவிழ்ந்து விபத்து 12 பேர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ஜிகே.வாசன் உண்ணாவிரதம் அய்யாக்கண்ணு , பிஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

* மதுரை திருமங்கலம் அருகே சந்தையூரில் தீண்டாமை சுவரின் ஒரு பகுதியை இடிக்கும் பணி தொடங்கியது.

* அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு வைகோ கண்டனம்.

* நேர்காணல் நடப்பதற்கு முன்பே சூரப்பா தான் துணைவேந்தர் என செய்தி பரவியது எப்படி ? – பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி.

* ஐபிஎல்போட்டிகளை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும். விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் – டிடிவி.தினகரன் எம்எல்ஏ.

* ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, அம்மாநில தலைமை செயலகம் நோக்கி, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சைக்கிள் பேரணி.

* காவிரி விவகாரம் : மத்திய – மாநில அரசை கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு.

* ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்ற உத்தரவை உடனே திரும்பப்பெற வேண்டும் – முக.ஸ்டாலின்.

* காவிரி உரிமை மீட்பு பயணத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தொடங்கி வைப்பார்.எஸ்சி , எஸ்டி, பிரச்சினை தொடர்பாக சென்னையில் வரும் 16-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் – திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தஞ்சையில் கல்லணை கால்வாயில் இறங்கி மாணவர்கள் போராட்டம்.

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து நெல்லையில் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உட்பட 362 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

* புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

* தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து 500 க்கு மேற்பட்ட மாணவிகள் போராட்டம்.

* பஞ்சாப் மாநிலத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் உதவியுடன் வெடிகுண்டு தயாரித்த இந்திரஜித் சிங் என்ற இளைஞரை கைது செய்து பஞ்சாப் போலீஸ் விசாரித்து வருகிறது.

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுத்தி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்.

* சைதாப்பேட்டை தொகுதியில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் வெற்றி பெற்றது செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

* தமிழ் சினிமாவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்க முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு : நடிகர் விஷால்.

* ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் சபாநாயகர் அறைக்குள் நுழைந்து உள்ளிருப்பு போராட்டம்.

* மே முதல் வாரத்தில் இருந்து, பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.முதல் முறையாக ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

* முதுகலை பொறியியல் படிப்பிற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.23 கடைசி நாள் – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

* சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வைஃபை மண்டலங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

* காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சி காவிரி ஆற்றில் மணலில் புதைந்து போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கைது.

* கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை கேட்டோம் துணைவேந்தரை கொடுத்திருக்கிறார்கள் – நடிகர் கமல்ஹாசன்.

* மாணவர்களை நீட் மற்றும் பொதுத்தேர்வுகளுக்கு தயார் செய்ய, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் செங்கோட்டையன்.

* ஜாமின் வழங்க கோரி நடிகர் சல்மான்கான் தாக்கல் செய்த மனு மீது நாளை தீர்ப்பு.

* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணாசாலையில் உள்ள தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு இளைஞர் அமைப்பினர் போராட்டம்.

* ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து 12 கிராம மக்கள் ராமேஸ்வரத்தில் போராட்டம்.

* காமன்வெல்த் – பளுதூக்கும் போட்டி : இந்தியாவின் சஞ்சிதா சானுவுக்கு தங்கம், குருராஜாவுக்கு வெள்ளி பதக்கம்.

* காமன்வெல்த் பளு தூக்கும் போட்டி : ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் வெண்கலம் வென்றார்.

* சாத்தூர் அருகே ரமமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

* சென்னை குன்றத்தூரை அடுத்த கோவூரில் பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவருக்கு வெட்டு தகராறில் சக மாணவர் ஆக்ஸா பிளேடால் வெட்டியதில் மாணவர் படுகாயம்.