full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சமுத்திரகனியின் ஆகாச மிட்டாயி படப்பிடிப்பு முடிந்தது

சமுத்திரகனியின் `நாடோடிகள்’ படம் மலையாளத்தில் வெளியாகி சாதனை படைத்தது. அடுத்து அவருடைய வெற்றிப்படமான `அப்பா’வை மலையாளத்தில் ரீமேக் செய்து சில மாதங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு தொடங்கியது.

இதில் ஜெயராமன் ஜோடியாக நடிக்க வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சில தினங்களில் அவர் விலகி விட்டார். இதையடுத்து ஜெயராமுடன் இனியா சேர்ந்து நடித்தார். மலையாள `அப்பா’ படத்துக்கு `ஆகாச மிட்டாயி’ என்று பெயர் வைக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்தது.

இப்போது முழு சூட்டிங்கும் முடிவடைந்து விட்டது. ஜெயராம் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு தெரிவித்து இருக்கிறார்.