full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

மொபைல் ஆப் உலகிலும் ’கை’ பதிக்கும் இயக்குநர்!!

வீட்டில் இருந்தபடியே, மக்களின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும் RingaApp என்ற செயலியை ஆண்ட்ராயிடு, ஐ.ஓ.எஸ் என இரண்டு வடிவத்திலும் உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் S.P.ஹோசிமின்.

இயக்குனர் ஷங்கர் அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்த இவர் பரத், ரேணுகா மேனன் நடித்த பிப்ரவரி 14 , சத்யராஜ், சாந்தனு, சனா கான் நடித்த ஆயிரம்விளக்கு ஆகிய படங்களை இயக்கியவர். இவரது அடுத்த திரைப்படத்துக்கான பணிகள் நடந்துவரும் நிலையில், இந்த செயலியை உருவாக்கியுள்ளார்.

இன்றைய கால கட்டத்தில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை நட்சத்திரங்கள் ரெஸ்டாரண்ட், கிரிக்கெட், கால் பந்து அணி, ஆன்லைன் வர்த்தகம் என வெவ்வேறு துறைகளில் ஷாருக் கான், சிரஞ்சீவி, ஆர்யா, ஜீவா, அனிருத் எனப் பலரும் கால் பதித்து சாதித்து வருவது டிரெண்ட் ஆகி வருகிறது. அதே போல இயக்குனர் S.P.ஹோசிமின் தொழில்நுட்பத்தின் மேல் கொண்ட ஆர்வத்தால் Ringa Technologies என்ற தனது இன்டர்நெட் நிறுவனத்தின் கீழ் RINGAAPP என்ற Instant Service Booking Mobile Appஐ துவக்கியுள்ளார்.

நமது அன்றாட தேவைகள் எதுவாக இருந்தாலும் அதை உடனே குறித்த நேரத்தில் திறம்பட செய்து முடிக்க ஒரு நம்பிக்கையான நபரை நாம் தினமும் தேடுகின்றோம் அல்லது நமக்கு தெரிந்தவர்களிடம் அப்படிப்பட்ட யாராவது இருக்கின்றார்களா என கேட்கிறோம் இது வாடிக்கை. ஆனால் நமது நேரத்தில் நமது பணிகளை நாம் நினைத்தவாறு குறைந்த கட்டணத்தில், குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிக்க ஆள் கிடைப்பதில்லை. இந்த கவலை இனி தேவையில்லை. ஏனென்றால் RingaApp இனி உங்களுக்கான பணியாளை உடனே தரும்.!

இனிமேல் வீட்டில் குழாய் ரிப்பேரா? அதை சரி செய்யும் பிளம்பர் வேண்டுமா ? ஏ.சி வேலை செய்யவில்லையா ? ஏ.சி.மெக்கானிக் வேண்டுமா? கம்யூட்டர் வேலைசெய்யவில்லை. அதை வீட்டிற்கு வந்தே சர்வீஸ் செய்ய வேண்டுமா…? இதுமட்டுமின்றி இண்டீரியர் டெக்கரேசன், சார்ட்டட் அக்கௌன்ட், வெப் டிசைனிங் என நீண்டுகொண்டே போகும் உங்கள் எந்த ஒரு தேவைக்கும் RingaApp மூலம் ஆன்லைனில் உங்கள் ஏரியாவில் அதாவது உங்களுக்கு அருகில் இருப்பவரை புக் செய்து வரவழைத்து, குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர்கள் GPS வாயிலாக தான் புக் செய்த சேவையாளர்களை எளிதாக track செய்து கொள்ள முடியும். ஆண்ட்ராயிடு, ஐ.ஓ.எஸ் என இரண்டு வடிவத்திலும் வெளிவந்திருக்கும் RingaApp ஐ உடனே டவுன்லோடு செய்து பயன் பெறலாம்.

அனைவரையும் ஊக்குவிக்கும் மனப்பான்மை கொண்ட இசைப்புயல் ஆஸ்கார் நாயகன் A.R. ரஹ்மான் அவர்களிடமும், நடிகர் சத்யராஜ் அவர்களிடமும் நல்லாசி பெற்று இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவர்களது வாழ்த்தும், பாராட்டும் இந்த செயலியின் பின் இருக்கும் 50க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப இளைஞர்களின் கடின உழைப்புக்கும், முயற்சிக்கும் பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.