full screen background image
Search
Monday 25 November 2024
  • :
  • :
Latest Update

Dr. அனிதாவாக மாறும் “பிக்பாஸ்” ஜூலி!

மத்திய அரசு கொண்டுவந்த மருத்துவ படிப்பிற்கான “நீட் தகுதித் தேர்வு” முறையை எதிர்த்து உச்சநீதி மன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தியவர் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா. போதுமான வசதிகள் இல்லாவிட்டாலும், மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவராக இருந்தாலும் கடினமான முயற்சியால் படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற போதும், நீட் தேர்வு முறையால் அவரது மருத்துவர் கனவு சிதைக்கப்பட்டது.

இந்த பித்தலாட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத அந்த இளம் மாணவி, விரக்தியில் தன் உயிரையே மாய்த்துக் கொண்டார். அதன் பிறகுதான் தமிழகம் முழுக்க நீட் அநீதிக்கு எதிராக போராட்டங்களும் வெடிக்க ஆரம்பித்தது. இப்படை வரலாற்றில் இடம்பிடித்த மாணவி அனிதாவின் வாழ்க்கை திரைப்படமாக உள்ளது.

இப்படத்தில், அனிதாவாக “ஜல்லிக்கட்டு மெரீனா போராட்டம்”, “பிக்பாஸ்” போன்றவைகளால் பிரபலமான ஜூலி நடிக்கிறார். இத்திரைப்படத்தை “Runhorse” நிறுவனம் சார்பில் அஜய் மற்றும் “RJ மீடியா”வும் இணைந்து தயாரிக்கிறது. பல ஹிட் பாடல்களை கொடுத்த திரு.S.தீணா இசை அமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு செல்வா ஒளிப்பதிவாளராகவும் P.C.மணிவர்மா கலைஇயக்குநராகவும் மேலும் ஆனந்தலிங்ககுமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர். இப்படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் வர்ஷாவும் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இயக்குனர் அஜய் இயக்கத்தில் உருவாக இருக்கும் “DR.S.அனிதா MBBS” திரைப்படதின் பூஜை இன்று பாடல் பதிவுடன் தொடங்கியது. இப்படத்தை பற்றி இயக்குனர் அஜய் கூறுகையில்,

“இந்த படத்தில் நாயகியாக ஜூலியை நடிக்கவைக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திரைப்படத்தை பார்த்தபிறகு அவர்கள் கூறியது தவறு என்று
உணர்வார்கள் . வணிக ரீதியான வெற்றிக்காவோ பணம் பண்ணும் நோக்கிலோ இப்படத்தை நான் இயக்கவில்லை. மருத்துவ படிப்பு படிக்கச் முழு தகுதி இருந்தும் நம்
கல்வி முறைக்கு சிறிதும் பொருந்தாத ஒரு தேர்வுமுறையால் மாணவி அனிதாவிற்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் நேர்ந்துவிட கூடாது என்ற நோக்கமே
காரணம். இத்திரைப்படம் தேசிய விருதை கண்டிப்பாக வாங்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இப்படத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் “ஆய்வுகூடம்”
படத்தின் நாயகன் ராஜ கணபதி நடிக்கவுள்ளார்.

எல்லாம் சரி, படம் எடுக்கிறேன்னு சொல்லி அந்த மகத்தான மாணவியின் வரலாறை சிறுமைப் படுத்திடாதீங்க டைரக்டர் சார் ப்ளீஸ்!!