வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகியுள்ளது ‘வட சென்னை’. அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்த்ர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய நடிகர் தனுஷ், ‘ இயக்குனர் வெற்றி மாறன் ஒரு முறை என்னை அணுகி, வட சென்னை படத்தில் ஹீரோவாக சிம்புவை நியமித்துள்ளேன். நீங்கள், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதமா..?? என்று கேட்டார். அதற்கு நான் இந்த படத்தில் ஹீரோ இல்லை என்றாலும், நான் வில்லனாக நடிக்க மாட்டேன். அந்த அளவிற்கு எனக்கு பெருந்தன்மை இல்லை.
அதன்பிறகு சின்ன பிரச்சனை ஏற்பட்டு மீண்டும் வட சென்னை படத்தின் நாயகனான அன்பு கதாபாத்திரம் மீண்டும் என்னிடமே வந்தது. எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஒரு சில படத்தில் நமது திறமையை வெளிக்காட்ட சில வாய்ப்புகள் கிடைக்கும். அந்த மாதிரி தான் இந்த படமும், எனது திறமையை திறம்பட வெளிக்காட்ட எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.’ என்று கூறினார்.