full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கோவாவில் இல்லை… அமெரிக்காவில்!

`விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த சமந்தா, அந்த படத்தின் தெலுங்கு பதிப்பான `யே மாயா சேசவா’ படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பல படங்களில் தொடர்ந்து நடித்துள்ள சமந்தா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நாக சைதன்யாவுடன் இணைந்து 4 படங்களில் நடித்துள்ள சமந்தா – நாக தைன்யா. `மனம்’ படத்தில் நடிக்கும் போது காதல் வலையில் விழுந்தனர். அதைத் தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதம் கிடைக்கவே நாகசைதன்யா – சமந்தா நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாத இறுதியில் நடந்தது.

சமந்தா தற்போது விஜய்யின் 61-வது படம், ‘இரும்புத்திரை’, ‘சாவித்ரி’, 2 தெலுங்கு படங்கள் என்று பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் நடிக்க இருக்கும் படத்துக்காக சிலம்பம் கற்று வருகிறார். அதேபோல் நாகசைதன்யாவும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படங்களை முடித்த பிறகு இருவருக்கும் திருமணம் என்று நடைபெறும் என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாகசைதன்யா மற்றும் சமந்தா, திருமணத்தை வருகிற அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினர். திருமணத்தை கலாச்சார முறைப்படி நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தேன்நிலவுக்கு கோவா செல்லவிருப்பதாக வெளியான தகவலை நாகசைதன்யா மறுத்துள்ளார். அவர்களது தேன்நிலவு நாட்களை அமெரிக்காவில் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாக சைதன்யா – சமந்தா திருமணம் வருகிற 6-ஆம் தேதி நடைபெறும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.