full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

பள்ளி மாணவர்களுக்காக களம் இறங்கி உதவி புரியும் சூர்யா ரசிகர்கள்!

திரையுலகில் தன்னகத்தே ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவரது படங்கள் சரிவர செல்லவில்லை என்றாலும் இவருக்கான ரசிகர்கள் எப்போதுமே இவரது கட்டுக்குள் தான்.

எப்போதுமே அடுத்தவர்களுக்கு உதவி புரிவதில் இவரது ரசிகர் மன்றம் எல்லோர்க்கும் ஓர் முன்னோடி தான்.

தமிழக அரசு சார்பில், முன்னாள் பள்ளி மாணவர்கள் அவர்களது பள்ளிகளுக்கு உதவிக்கரம் அளிக்கும்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதனால், பல பள்ளி மாணவர்கள் அவர்களது பள்ளிகளுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் திருவாரூர் மாவட்ட சூர்யா ரசிகர்கள் மன்றம் சார்பாக உதயமார்த்தாண்டபுரம் அரசு நடுநிலை பள்ளிக்கு மிகப்பெரிய LED TV வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.

இன்னும் உதவிகள் வழங்கும் பட்டியல் நீளும் என்கின்றனர் ரசிகர் மன்றத்தினர்…

உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்..