full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

பிரம்மாண்டத்துடன் மீண்டும் வலம் வரும் கலைஞர்​ ​தொலைக்காட்சி

 

உங்களின் பெரு ஆதரவை பெற்ற கலைஞர் தொலைக்காட்சி புத்தம் புதிய பொலிவுடன் விரைவில் உங்களை மகிழ்விக்க வருகிறது. அதற்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வித்தியாசமான பல நிகழ்ச்சிகள், மற்றும் நெடுந்தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிறது.


அதுமட்டுமின்றி, கலைஞர் தொலைக்காட்சியில் ஏற்கனவே ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் புத்தம் புதிய வடிவில் காணவிருக்கிறீர்கள். இதில், நாளைய இயக்குனர் – 6 (வருங்கால இயக்குனர்களுக்கு தளம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்ச்சி), திண்டுக்கல் ஐ. லியோனியின்பேச்சுத் திருவிழா (இளம் பேச்சாளர்களை உலகிற்கு அறிமுகப் படுத்தும் மேடை) உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் புத்தாக்கம் செய்யப்பட இருக்கிறது.

பா.விஜய்யின் நெஞ்சே எழு (கலாச்சாரம் சம்பந்தப்பட்ட விவாத நிகழ்ச்சி) மற்றும் நம்ம வீட்டு நட்சத்திரம், ரெட் கார்பெட், ஸ்டார் வேர்ல்டு, சூப்பர் பேமிலிபோன்ற பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் களம் கண்டுள்ளன. அதே நேரத்தில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் விஜயலட்சுமி, மௌனிகா, சமிதா நடிப்பில் டும் டும் டும், பூவே செம்பூவே போன்ற நெடுந்தொடர்களும், நடிகர் ஜெகன் தொகுத்து வழங்கும் இங்க என்ன சொல்லுது என்கிற உள்ளுணர்வை மையமாக கொண்ட பிரபலங்களுக்கான புதுமையான விளையாட்டு போட்டியும்  வருகிற  ஜூலை முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. அத்துடன் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களும் உங்களை மகிழ்விக்க காத்திருக்கின்றன. வார கடைசி நாட்களில் மேலும் விசேஷமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உங்களை கவர இருக்கின்றன.

கலைஞர் டிவியின் இந்த புத்தாக்கம் குறித்து  தொலைக்காட்சி நிர்வாகம் கூறும்போது “இந்த சீரமைப்புக்காக புதிய குழு ஒன்றை நாங்கள் உருவாக்கி இருந்தோம்.. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த மாற்றங்கள் நமக்கு ஒரு புதிய திருப்பத்தை தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை”. கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் பிரிவு தலைவர் திரு. அந்தோணி திருநெல்வேலி இதுகுறித்து தெரிவிக்கும் போது, ”தமிழ் குடும்பங்கள் நெடுங்காலமாக எதிர்பார்த்து காத்திருந்த பொழுதுபோக்கு அம்சங்களை விரைவில் கலைஞர் தொலைக்காட்சி வழங்க இருக்கிறது” என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

நமது சமூகம் அழகான பன்முகத்தன்மையை அடிப்படையாக கொண்டது. இந்த பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாக கலைஞர் தொலைக்காட்சியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அமையும் என்பது உறுதி.

இந்த புத்தாக்கத்தை அனைவரும் அறியும் வகையில், பொது இடங்கள், பிற ஊடகங்கள் மற்றும் இணையவழி என பெரிய அளவில் விளம்பரப் படுத்த முடிவு செய்து இருக்கிறது கலைஞர் தொலைக்காட்சி. நேயர்களுக்கு விருந்தாக அமையவிருக்கும் நிகழ்ச்சிகள், விளம்பரதாரர்களுக்கும் மிகப் பெரிய பலனாக அமையும் என்பதே விவரம் அறிந்த பல துறை நிபுணர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

இது குறித்து கலைஞர் தொலைக்காட்சியின் தேசிய விற்பனை பிரிவு தலைவர், பத்மா பாலசுப்பிரமணியம் கூறுகையில், “இந்த புத்தாக்கம் எங்களுக்கு பெருமகிழ்ச்சியை தரும் அதே வேளையில், எங்கள் விற்பனைக்கு ஒரு புதிய உத்வேகத்தை தரும்” என்றார்.

தற்போது நாம் காத்திருப்பதெல்லாம், கலைஞர் தொலைக்காட்சியின் இந்த புத்தாக்கத்தை கண்டு களிக்கவே.