
படம் குறி்த் து இயக்குநர் வெற்றி செல்வன் பகிர்ந்து கொணடதாவது….
“‘எண்ணித் துணிக’ என்ற இப்படத்தின் தலைப்பு திருக்குறளிலிருந்து எடுக்கப்பட்டதாகும். “எண்ணித் துணிக கர்மம்… ” என்று துவங்கும் அற்புதமான குறள் இது, ஒரு செயலில் ஈடுபடத் தொடங்கும் முன் அது குறித்து எத்தனை முறை வேண்டுமானல் சிந்திக்கலாம். ஆனால் முடிவெடுத்து விட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அதிலிருந்து பின் வாங்கக்கூடாது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்தக் குறள். இதை மையப்படுத்திதான் இப்படத்தின் கதாநாயகன் கதிர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜெய் இந்த வேடத்தில் நடிக்கிறார். தகவல் தொழில் நுட்பக் கம்பெனி ஒன்றில் பணியாற்றும் ஜெய், அந்தக் கணத்துக்காக வாழ்கிறவர். அதற்காக அவர் ஜாலி மனோபாவம் கொண்டவர் என்று சொல்வதற்கில்லை. தன் குடும்பம் மற்றும் நண்பர்கள் குறித்து அக்கறை செலுத்தும் நல்லியல்பு கொண்ட நர்மதா என்ற வேடம்தான் அதல்யா ரவி ஏற்றிருக்கும் வேடம், சுண்ணாம்பு மற்றும் வெண்ணெய் போல் முரண்படும் இந்த இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். ஆனால் படத்தில் முக்கிய திருப்பம் ஏற்படுவது இந்த முரண்பாட்டை வைத்து அல்ல. அமைதியாகச் சென்று கொண்டிருக்கும் ஜெய்யின் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தும் சில ஆட்களால். இதற்கு பதிலடி தரும் விதத்திலான நடவடிக்கைகளில் ஜெய் ஈடுபடத் தொடங்குகிறார். மொத்தத்தில் ‘எண்ணி்த் துணிக’ ரேஸ் வேகத்தில் செல்லும் திரில்லர் வகைப் படமாகும்” என்றார் இயக்குநர் வெற்றி செல்வன்.

அஞ்சலி நாயர் மற்றொரு பிரதான வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைக்க. ஜே.பி.தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். வி.ஜே.சபு ஜோஸப் படத்தொகுப்பையும், ஜி.என்.முருகன் சண்டைக் காட்சிகளையும் கவனிக்கின்றனர். என்.ஜே.சத்யா ஆடை வடிவமைப்பை கவனிக்கிறார், 96 படப்புகழ் கார்த்திக் நேத்தாபாடல்களை எழுத, விளம்பர டிசைனர் பொறுப்பை ராஜா ஏற்றிருக்கிறார்.