“அன்புள்ள கில்லி” ஃபர்ஸ்ட் லுக் – ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு !

First Look
சமீபத்தில் “அன்புள்ள கில்லி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. “அன்புள்ள கில்லி” படத்தின் படக்குழு ஃபர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பில் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்து வருகின்றனர்.


இது குறித்து இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத் கூறியதாவது…

“அன்புள்ள கில்லி” படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைவரின் சுய வாழ்வும் ஒரு வகையில் இப்படத்தில் பிரதிபலித்திருக்கிறது. ஏனெனில் அனைவருமே செல்லப்பிராணி வளர்ப்பவர்கள். ஒரு வகையில் அவர்களின் வாழ்வு தான் இந்தக்கதை. ஃபர்ஸ்ட் லுக் வெளிடுவது குறித்து வரும்போது எங்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி அதனை வெளியிட்ட திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் செல்லப்பிராணி வளர்ப்பவர் என்பது தான். அவர் மட்டுமல்ல அவர் வீட்டில் அனைவருமே செல்லப்பிராணி மீது காதல் கொண்டவர்கள். உதயநிதியின் கடும் வேலை நேரங்களில் அவரது செல்லப்பிரானியுடன் வரலாற்று நாயகர் திரு கருணாநிதி அவர்கள், கொஞ்சி விளையாடிய சில இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டின் போது எங்களிடம்  நேரம் ஒதுக்கி படம் பற்றி, படப்பிடிப்பு பற்றி, பல விசயங்களை கேட்டறிந்து, அனைவரும் வெற்றி பெற வாழ்த்தினார். அவரது எளிமையும் பண்பும் இயல் வாழ்வில் செல்லப்பிராணி மீது அவரது காதலும் எங்களை பிரமிக்க செய்தது. நேர்மறை பாராட்டுகள் கடந்து பலர் செல்லப்பிராணி காதலர்களாக மாறுவது எனக்கு பெரு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. “அன்புல்ல கில்லி” நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும்  கமர்சியல் படமாக இருக்கும். முக்கியமாக அனைவரும் குடும்பத்துடன் தியேட்டரில் ரசித்து பார்க்கும் படமாக எங்கள் படம் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை கொண்டாடுவார்கள். எனவே இப்படத்தை வரும் கோடை கால விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இசை மற்றும் டிரெயலர் வெளியீடு பற்றிய அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

“அன்புள்ள கில்லி” திரைப்படம் இதுவரை உருவாகியிருக்கும் மனிதன், நாய் உறவு சம்பந்தமான கதைகளிலிருந்து மாறுபட்டு தனிச்சிறப்பான அம்சத்தை  கொண்டிருக்கிறது. மேலும் நாயின் மனகுரலில் கதை நகருவதாய் வெளிவரும் முதல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா இப்படத்தின் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, இவருடன் ஒரு லேப்ராடர் வகை நாயும் நடிக்கிறது.

Rise East Entertainment Pvt Ltd மற்றும்  Master Channel சார்பில் ஶ்ரீநிதி சாகர், E. மாலா இப்படத்தினை தயாரிக்கிறார்கள். முன்னணி ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கொடைக்கானலில் அழகிய வண்ணமயமான பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.