தற்போது ரசிகர்களை மகிழ்விக்க புத்தம் புது அவதாரத்தில் அவர் நடித்திருக்கும் “அஹம் பிரம்மாஸ்மி” தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சமீபமாக வலுவான கதையம்சம் கொண்ட தென்னிந்திய படங்கள் வட இந்தியாவிலும் பெரு வெற்றி பெற்று வருகிறது. தற்போதைய காலகட்டதில் மொழி எல்லைகள் கடந்து தென்னிந்திய படங்களும் இந்திய படமாக அனைத்து இடங்களிலும் கவனம் ஈர்த்து வருகின்றன.அந்த வகையில் வெளியாகியுள்ள “அஹம் பிரம்மாஸ்மி” ஃபர்ஸ்ட் லுக் இந்திய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் படம் வலுவான கதையம்சம் கொண்ட அழுத்தமான படமாக இருக்குமென்று நிரூபித்துள்ளது. இப்படம் மார்ச் 6 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் விபூதி அணிந்து வித்தியாச தோற்றத்தில் நகைப்பு, ரௌத்திரம், அமைதி என மூன்று பாவங்களை வெளிப்படுத்தும் மஞ்சு மனோஜின் தோற்றம் அனைவரையும் ஈர்த்து தீயாக பரவி வருகிறது.
முழு இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் “அஹம் பிரம்மாஸ்மி” திரைப்படத்தை மஞ்சு மனோஜ் மற்றும் நிர்மலா தேவி MM Arts நிறுவனம் சார்பில் தயாரிக்க, வித்யா நிர்வாணா, மஞ்சு ஆனந்த் இப்படத்தினை வழங்குகிறார்கள். கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் இயக்குநர் ஶ்ரீகாந்த் N ரெட்டி.
அச்சு ராஜாமணி, ரமேஷ் தமிழ்மணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். சன்னி குருபாதி ஒளிப்பதிவு செய்கிறார். ராமஜோகய்யா சாஸ்த்ரி மற்றும் ஆனந்த் ஶ்ரீராம் பாடல்கள் எழுதியுள்ளனர். தம்மிராஜு படத்தொகுப்பு செய்கிறார். விவேக் AM கலை இயக்கம் செய்ய, பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். திவ்யா நாரயணன், கல்யாண் சக்ரவர்த்தி கூடுதல் வசனங்களை எழுதியுள்ளனர். தீபக் போஜ்ராஜ் விளம்பர வடிவமைப்பு செய்கிறார். தொட்டம்புடி சுவாமி இணை இயக்கம் செய்ய, வெங்கட் சல்லகுல்லா நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.