full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

நடிகர் வி‌ஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி – மேலாளர் போலீசில் புகார்

நடிகர் வி‌ஷால் ‘செல்லமே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர், ‘திமிரு’, ‘ஆம்பள’, ‘பாயும்புலி’, ‘இரும்புத்திரை’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், சொந்தமாக சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் இவர், பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள குமரன் காலனியில் விஷாலின் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் நடிகர் வி‌ஷாலின் மேலாளர் அரி என்பவர், வடபழனி போலீஸ் உதவி கமி‌‌ஷனர் ஆரோக்கியம் பிரகாசத்திடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர், கூறியிருப்பதாவது: நடிகர் வி‌ஷால் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ரூ.45 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது. அந்த பணத்தை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கையாடல் செய்தார்களா? அல்லது பணம் எப்படி மோசடி செய்யப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.
உதவி கமி‌‌ஷனரின் அறிவுறுத்தலின் பேரில், விருகம்பாக்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் வி‌ஷாலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.