full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ஆர்யாவின் டெடி?

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில் பொன்மகள் வந்தாள், பெண்குயின் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகின. அடுத்ததாக காக்டெய்ல், டேனி போன்ற படங்களும் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளன.
இந்நிலையில், சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி திரைப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இதில், சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.