full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

தலைவி படத்திற்காக புதிய தோற்றத்தில் கங்கனா ரணாவத்

ஜெயலலிதாவாக நடிக்கும் தனது தோற்ற புகைப்படம் ஒன்றை கங்கனா டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். கொரோனா பரவலுக்கு முன்பே தலைவி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். இந்த படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறும் பிரமாண்ட மாநாடு மற்றும் ஊர்வல காட்சிகளுக்கு கொரோனா காரணமாக கிராபிக்சை பயன்படுத்துகின்றனர்.

இந்தநிலையில் ஜெயலலிதாவாக நடிக்கும் தனது தோற்ற புகைப்படம் ஒன்றை கங்கனா டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் “தலைவி படத்துக்காக எனது உடல் எடையை 30 வயதுக்கு பிறகு 20 கிலோ கூட்டி நடிக்க வேண்டி இருந்தது. பரத நாட்டியமும் ஆட வேண்டி இருந்தது. இதனால் எனது முதுகு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனாலும் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடிப்பதை விட மற்ற எதுவும் திருப்தியை தராது. மீண்டும் பழைய நிலைக்கு எனது உடலை கொண்டு வருவது எளிதான காரியம் இல்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.