full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

அமேசான் பிரைமில் வெளியாகிறது சூரியாவின் நான்கு திரைப்படங்கள்

சூரியாவின் 2டி நிறுவனத்துடன் அமேசான் பிரைம் நிறுவனம் ஒப்பந்தம்

 

எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரேம் வீடியோவில் வெளியாகிறது என்பதை அமேசான் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது. இதுதொடர்பாக 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் அந்நிறுவனம் நேரடியாக அமேசன் பிரைம் வீடியோவில் திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியலில் ‘ஜெய் பீம்’, ‘உடன்பிறப்பே’, ‘ஓ மை டாக்’ மற்றும் ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ ஆகிய படங்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த திரைப்படங்களில் தமிழ் திரை உலகின் திறமையான நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், புதுமுகங்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

அமேசான் பிரைம் வீடியோவும், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வகையில் அவர்களின் நேரடி சேவையை வழங்கி வருகிறது. திரில்லர், சஸ்பென்ஸ், காமெடி, ஃபேமிலி டிராமா என பல்வேறு ஜானர்களில் தயாராகி, பட்டியலிடப்பட்ட படங்களில் இந்தியாவின் மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவரான ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்த திரைப் படங்களும் இடம்பிடித்திருக்கிறது. இந்த திரைப்படங்களில் இந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜாமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் மணி கண்டன் ஆகியோருடன் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ போன்ற படங்களும் உள்ளன.

சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ் மற்றும் சித்து ஆகியோர் நடித்த குடும்ப ஃபேமிலி டிராமா ஜானரில் தயாரான ‘உடன்பிறப்பே’ என்ற படமும் உள்ளது.

அருண் விஜய், அர்ணவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார் மற்றும் வினை ராய் நடித்த குழந்தைகளை மையப்படுத்திய ‘ஓ மை டாக்’ என்ற படமும் இடம் பெற்றிருக்கிறது.

ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்த நையாண்டி நகைச்சுவையை மையப்படுத்திய ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படமும் இப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரான சூர்யா இதுதொடர்பாக பேசுகையில்,’ கடந்த ஆண்டு பெரும் மாற்றமாக அமைந்தது. முன்னோடிகள் இல்லாத சூழ்நிலையில், திரைப்பட வெளியீட்டின் பல்வேறு புதுமைகளை நாங்கள் மேற்கொண்டோம். 2டி நிறுவனத்தின் அண்மைய திரைப்பட வெளியீடுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவையாக அமேசான் இருக்கிறது. பொன்மகள் வந்தாள் முதல் சூரரைப்போற்று வரை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பார்வையாளர்களை சென்றடைந்தது. இதற்கு காரணமான அமேசான் பிரைம் வீடியோ உடன் தொடர்ந்து தொழில்ரீதியான ஒத்துழைப்பை நீட்டிப்பதில் நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்’ என்றார்.