full screen background image
Search
Sunday 24 November 2024
  • :
  • :
Latest Update

ஜெயில்-MOVIE REVIEW

 

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ஜெயில். தன் அம்மா ராதிகாவுடன் சென்னையில் வசித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். இவருக்கு நந்தன் ராம் மற்றும் பாண்டி என்று இரண்டு நண்பர்கள். திருடுவதை தொழிலாக வைத்து இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒரு பிரச்சனையில் நண்பன் நந்தன் ராமை இழக்கிறார். மேலும் மற்றொரு நண்பர் பாண்டி ஜெயிலுக்கு சென்று விடுகிறார்.தன் இரண்டு நண்பர்கள் இல்லாமல் தவிக்கும் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறார்.

Jail Movie Songs Download: GV Prakash's Jail Tamil Movie Albums Audio

இறுதியில் திருட்டு தொழிலை கைவிட்டாரா? நண்பனை ஜெயிலில் இருந்து மீட்டாரா? நண்பரை இழக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.அசல் சேரி பகுதி கர்ணாவாக அசத்தியிருக்கிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ். இவரிடம் உள்ள நடிப்பு திறமையை இயக்குனர் வசந்தபாலன் கொண்டு வந்திருக்கிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக வட சென்னை பாஷையில் சிறப்பாக பேசி கவர்ந்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி சேரி பகுதி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.GV Prakash's Jail gears up for teaser release! Tamil Movie, Music Reviews  and News

ஜி.வி.பிரகாஷின் நண்பர்களாக நடித்துள்ள நந்தன் ராம் மற்றும் பசங்க பாண்டி இருவரும் சிறந்த தேர்வு. இவர்களின் மிகைப்படுத்தப்படாத நடிப்பு படத்திற்கு பலம். ராதிகாவிற்கு பெரிதாக காட்சிகள் இல்லாதது வருத்தம்.ஜி.வி.பிரகாஷின் இசையில் காத்தோடு காத்தானேன் என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடல் விஷுவலில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அபர்ணதியின் ரொமான்ஸ் அதிகம். பாடல்கள் ரசிக்க வைத்தாலும், கதைக்கு சில பாடல்கள் தேவையா? என்று சொல்லு அளவிற்கு உள்ளது. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் மக்களின் வலிகளை இயக்குனர் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருந்தால் ரசித்திருக்கலாம். படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி மெதுவாகவும் செல்கிறது.மொத்தத்தில் ஜெயில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை