நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில், K2K புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சேத்தன் சீனு நடிக்கும் படத்தின் காதலர் தின சிறப்பு போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது

cinema news
நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில், K2K புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சேத்தன் சீனு நடிக்கும் படத்தின் ப்ரீ லுக் மற்றும் காதலர் தின சிறப்பு போஸ்டர்கள் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.ப்ரீ லுக் போஸ்டர், கையில் ரோஜாவோடு மரத்தின் பின்னால் மறைந்தபடி கதாநாயகன் யாருக்காகவோ காத்திருப்பது போல் இருந்தது.இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், காதலர் தின சிறப்பு போஸ்டர் கவனத்தை இன்னமும் ஈர்த்தது.கதாநாயகனின் காதல் வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை என்பதைக் குறிப்பது போல சேத்தன் சீனு ஒரு குளியலறையில் நிர்வாணமாக சோகமாக உட்கார்ந்திருப்பது போன்று அது அமைந்திருந்தது.
இந்த இரண்டு போஸ்டர்களும் படத்திற்கான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.கண்ணுக்குள் நிலவு, காசி, சமுத்திரம் போன்ற பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் நடித்த காவேரி கல்யாணி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான K2K புரொடக்ஷன்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.இன்னும் பெயரிடப்படாத இப்படம் காதல் மற்றும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை மையமாக கொண்டது என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. மிக விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும், அதைத் தொடர்ந்து வெளியீட்டு தேதி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
Kalyani dons director's hat
 
சுகாசினி மணிரத்னம், சித்தி இட்னானி, ஸ்வேதா, ரோஹித் முரளி, ஷக்கலக்க ஷங்கர், விடிவி புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை ஆல்பி ஆன்டனி மற்றும் சக்தி சரவணன் கையாள, அச்சு ராஜாமணி படத்திற்கு இசையமைக்கிறார். முரளி மற்றும் ஜீத்து இப்படத்திற்கு கலை இயக்குநர்களாக பணியாற்றுகிறார்கள்.சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 12 சுதந்திரப் போராட்ட வீரர்களின் தோற்றத்தில் சேத்தன் சீனு வெளியிட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.காவேரி கல்யாணி இயக்கத்தில் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தை K2K புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.