பிரபுதேவா வெளியிட்ட ராபர்ட் நடிக்கும் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் டிங் டாங் படத்தின் பூஜை படப்பிடிப்பு ஆரம்பமானதுV

cinema news
பல்வேறு  படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார் இப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.அவர் முற்றிலும் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் ‘டிங் டாங்’.இப்படத்தை நடன இயக்குநரும் அவரது சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். WeAllProduction, RRPictures  தயாரிக்கும் ‘டிங் டாங் ‘ படத்திற்கு  ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தொகுப்பை ராம்நாத் கவனிக்கிறார். நடனம்- வினோத் ,சண்டைக் காட்சிகள்  வீரா .தயாரிப்பு ராபர்ட் ராக் .

 

சஸ்பென்ஸ் திரில்லர் ரகமாக இருக்கும் இந்தப் படம், பல்வேறு வணிக அம்சங்களுடன்  நகைச்சுவையும் கலந்து உருவாகிறது. இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்களும் நான்கு கதாநாயகிகளும் நடிக்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய மொழிகளில் பிரபலமான முகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்களுடன் நடன இயக்குநர் ராபர்ட் முக்கியமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு இது புதிய நடிப்பு அனுபவமாக இருக்கும்.’ டிங் டாங் ‘ படத்தின் தொடக்கவிழா இன்று வளசரவாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக்கை நடன இயக்குநர் பிரபுதேவா இன்று வெளியிட்டார்.

இதுபற்றி படத்தின் இயக்குநர் ஜே.எம் பேசும்போது,
 
“நானும் சரி எனது சகோதரர் ராபர்ட்டும் சரி    மாஸ்டர் பிரபு தேவா அவர்களின் தீவிரமான ரசிகர்கள் மட்டுமல்ல அவரது மாணவர்களும் கூட.எனது இயக்கத்தில் ஏற்கெனவே ‘ஒண்டிக்கு ஒண்டி ‘ என்ற படம் வெளியாகி உள்ளது .இரண்டாவது படமாக  ‘டிங் டாங் ‘உருவாகிறது.டிங் டாங் என்றாலே கடிகாரம் என்பது அனைவருக்கும் நினைவில் வரும். அதுபோல் தான் இப்படத்தின் கதையும் காலத்தினை முக்கியமான மையமாக வைத்து உருவாகிறது.
 
இந்தப் படம் ஒரு வித்தியாசமான திரில்லர் படமாக இருக்கும்.படத்தில் என் சகோதரர் ராபர்ட் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.இந்தப் படத்தில் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எங்கள் மரியாதைக்குரிய மாஸ்டர் பிரபுதேவா அவர்கள் வெளியிட்டது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.தென் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் உயர்ந்த இடத்தில் இன்று அவர் இருக்கிறார்.நானும் ராபர்ட்டும் அவரது படங்களில் உதவியாளராகப் பணியாற்றி இருக்கின்றோம். எங்களுக்கு எல்லா வகையிலும் குருவாக அவர் இருக்கிறார் .அப்படிப்பட்டவர் இன்று  எங்கள்  படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருப்பது பெருமையாக இருக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கி தொடர்ந்து நடைபெறும். இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்”இன்று பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமானது என்கிறார் இயக்குநர் JM.