வலிமை பிரமாண்ட வெளியீட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் மலேசியா தல அஜித் ரசிகர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷனால் முழுமையாக ஆதரிக்கப்பட்டது .சிறப்பு அழைப்பாளர்களாக மலேசிய மனித வளத்துறை அமைச்சரும் தீவிர தல அஜித் ரசிகரான டத்தோ ஸ்ரீ M .சரவணன் அவர்களும் , மாலிக் ஸ்ட்ரீம்ஸ் சிஇஓ டத்தோ அப்துல் மாலிக் தஸ்திகர் அவர்களும் கலந்துகொண்டனர் .இந்திய சிறப்பு சூப்பர் பைக்கர்களின் சாகசங்கள் , சிங்க நடனம் மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது .மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் 50 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன்ளிகளுக்கு திரைப்படத்தைப் பார்க்கவும் , அஜித் நற்பணி அறக்கட்டளைக்கு மலேசிய பண மதிப்பில் (RM 5000 ) ரொக்கம் மற்றும் இலவச சானிடைசர்கள் மற்றும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது. அனைவரும் படத்தை ரசித்தார்கள். மலேசியா தல அஜித் ரசிகர் மன்றம் நிறைய தொண்டுகளை செய்துள்ளது. முக்கியமாக கொரோனா தொற்றின் போதும் , மலேசியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இளைஞர் அதிகாரமளிக்கும் நிறுவனமாகவும் உதவி செய்து வருகின்றனர் .