தமிழ் திரையுலகில் முதல் முறையாக, ரசிகர்கள் வெளியிட்ட “மாறன்” பட டிரெய்லர் ! 

cinema news
Dhanush's Maaran to premiere directly on Disney+Hotstar. Watch motion  poster - Movies News
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இந்தியாவின் பெருமைமிகு நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாறன்” படத்தின் டிரெய்லரை, தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். 

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் போன்றவை பெரும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும் வெளியிடப்படும், ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரெய்லரை, டிவிட்டர் தளத்தின் புதிய வசதியை பயன் படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.  டிவிட்டரின் இந்த புதிய வசதியான Twitter Unlock மூலம்,  நடிகர் தனுஷ் உடைய தீவிர ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து ஒன்றிணைந்து, இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்திய முதல் படமாக “மாறன்” திரைப்படம் சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் இந்த புதிய அனுபவத்தால் மிகப்பெரும் உற்சாகத்துடன் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். மாறன் டிரெய்லர் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் அதன் அதிகரப்பூர்வ YouTube பக்கத்திலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மாறன் டிரெய்லர் இணையெங்கும் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.  
Dhanush-starrer Maaran to release on Disney+Hotstar | Entertainment  News,The Indian Express
“மாறன்” திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் TG தியாகராஜன் வழங்குகிறார், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஷர்பு மற்றும் சுஹாஸ் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி இப்படம்  பிரத்யேகமாக வெளியாகிறது.