ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும், மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது திரைப்படம் ‘மாமன்னன்’ !

cinema news

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தற்போது வெற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.‘மாமன்னன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் உருவாகும் 15வது படமாகும்.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கின்றார். நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.‘பரியேறும் பெருமாள்’ ‘கர்ணன்’ வெற்றிப் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் – இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான், இவர்கள் முவரும் முதன் முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.பெரும் நட்சத்திரங்கள் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு – ரெட் ஜெயன்ட் மூவீஸ்
இணை தயாரிப்பு – M. செண்பகமூர்த்தி, R.அர்ஜீன் துரை
இயக்கம் – மாரி செல்வராஜ்
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
கலை – குமார் கங்கப்பன்
படத்தொகுப்பு – செல்வா Rk
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
பாடல் – யுகபாரதி
நடனம் – சாண்டி
தயாரிப்பு மேற்பார்வை – E.ஆறுமுகம்
விநியோக நிர்வாகம் – ராஜா.C