ரசிகர்மன்ற சந்திப்பின் போது தன் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் அருண் விஜய்

cinema news

கடந்த இரண்டாண்டு காலமாக கொரோனா தொற்று பாதிப்பால் மக்கள் முடங்கி கிடந்த நிலையில் இப்பொழுது தான் அனைவரும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். திரைத்துறையிலும் இப்பொழுதுதான் சுமூக நிலையை அடைந்துள்ளது. திரைப்படங்களும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் அருண்விஜய் அவர்கள் இந்த இரண்டு ஆண்டு காலமாக தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் நேரில் சந்திக்க இயலாத காரணத்தால் தொலைபேசி வாயிலாகவும் வீடியோ கால் மூலமாக ரசிகர்களையும் மற்றும் அவர்களின் குடும்பத்தார்களின் நலம் விசாரித்து உரையாடல் மேற்கொண்டு வந்தார், தற்போது இயல்பு நிலை அடைந்துள்ள நிலையில் அவர் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்,  அது மட்டுமின்றி இரண்டாண்டுகள் கழித்து அவருடைய திரைப்படங்கள் யானை, சினம், பார்டர், ஓ மை டாக்,  அக்னி சிறகுகள் ஆகிய திரைப்படங்கள் மிக விரைவில் வெளியாக இருக்கிறது அதை தொடர்ந்து கடந்த மாதம் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டார் திருவண்ணாமலையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.
சமீபத்தில் கோயம்புத்தூர் சென்றிருந்த போதும் கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார். கடந்த வாரம் தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த போதும் தஞ்சாவூர்,  நாகப்பட்டினம்,  திருச்சி மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.
நேற்று சென்னை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து இருக்கிறார், அவரின் யானை படம் வெளியாகும் முன் அனைத்து மாவட்ட ரசிகர்களை சந்திக்க இருப்பதாக ரசிகர் மன்ற வாயிலாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்நிகழ்வில் தன்னை சந்திக்க வந்த அருண் விஜய் ரசிகர் மன்ற தென் சென்னை மாவட்ட நிர்வாகி K.ஶ்ரீதரின் பிறந்தநாள் என்பதை அறிந்த நடிகர் அருண் விஜய் அவருடைய பிறந்த நாளுக்கு கேக் வெட்டி தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு தனது ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.