சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளை கண்டு பிடித்து, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறார். தன் ஒரே மகளை கொலை செய்த கொலைகாரனை தேடி அலையும் அசிஸ்டன்ட் கமிஷனராக விக்டர் வருகிறார். இந்த மூன்று கதா பாத்திரங்களையும் இணைத்து சொல்லப்பட்ட இப்படத்தின் திரைக்கதை பார்வையாளர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்யும்.
கல்வியும், மருத்துவமும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. அதில் கற்று தேர்ந்தவர்கள், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியது போய், இன்று அதை பணம் சம்பாதிக்கும் வியாபார தளமாக்கி விட்டனர். சூது கவ்வும் தர்மத்தை, அதனிடமிருந்து மீட்கும் க்ரைம் த்ரில்லர் படமே பேட்டரி. பொதுவாக, க்ரைம் கதை என்றாலே எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். இப்படத்தில் வரும் திருப்பங்கள், ஒரு புதிர் விளையாட்டு போல, ஏன்? எதற்கு? எப்படி? என்கிற ஆர்வத்தை தூண்டும் படியாக இருக்கும்
கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் கன்னட நடிகர் ராஜ் தீபக் ஷெட்டி அறிமுகமகிறார். மற்றும் யோக் ஜப்பி, எம். எஸ் பாஸ்கர், நாகேந்திர பிரசாத், அபிஷேக், ராஜ்குமார், ஜார்ஜ் மரியம், கிருஷ்ண குமார், ராம, பேபி மோனிகா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
மக்கள் தொடர்பு ஜான்சன், நிர்வாக தயாரிப்பாளர்கள் நவீன் – ஜெய் சம்பத், பாடல்கள் நெல்லை ஜெயந்தா – தமயந்தி, சண்டை பயிற்சி ஹரி தினேஷ், நடனப் பயிற்சி தினேஷ், படத்தொகுப்பு ராஜேஷ்குமார், கலை சிவா யாதவ், திரைக்கதை – வசனம் ரவிவர்மா பச்சையப்பன் , ஒளிப்பதிவு கே.ஜி. வெங்கடேஷ், இசை சித்தார்த் விபின், கதை – இயக்கம் மனிபாரதி, இணைத் தயாரிப்பு எம். செங்குட்டுவன், எம். கோபிநாத், தயாரிப்பு சி. மாதையன்.
இப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.