“ஜனங்களின் கலைஞன்” மறைந்த விவேக் முதலாம் ஆண்டு நினைவு நாளில் மரம் நடும் விழா..!

cinema news
மறைந்த நடிகர் சின்னக் கலைவாணர் விவேக் அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் இன்று விவேக்’ஸ் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நண்பரும் நடிகருமான செல் முருகன் இன்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விவேக் அவர்களின் நண்பர்கள் துணையுடன் தொடங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ. பி.எஸ்., நடிகர்கள் பாபி சிம்ஹா, உதயா,  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.