full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவில் ஒரு பெரிய முயற்சியை மேற்கொள்கிறது; பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகளின் அதன் மிகப்பெரிய உள்ளடக்க பலகையை அறிவிக்கிறது

இந்தியாவில் உள்ளடக்க முதலீடுகளை இரட்டிப்பாக்குகிறது . அடுத்த 2 வருடங்களில் ஹிந்தி தமிழ் மற்றும் தெலுங்கில் 40 க்கும் அதிகமான புதிய தலைப்புகளை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

ஒரிஜினல் திரைப்படங்களுக்கு உள்ளே முயற்சியை முன்னெடுக்கிறது;  புதிய பல-வருட லைசென்சிங் டீல்கள் (தொழில் உரிமங்கள்) மற்றும்   முக்கிய இந்திய திரைப்பட ஸ்டூடியோக்களுடனான இணை-தயாரிப்புகளை அறிவிக்கிறது

பரிவர்த்தனை வீடியோ-ஆன்-டிமாண்ட் (தேவையின்படி அளிக்கப்படும் வீடியோ)  (டிவிஒடி) திரைப்பட வாடகை சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி ப்ரைம் வீடியோவின் மார்கெட் இடத்தில் வழங்குபவைகளை விரிவாக்குகிறது. இந்த டிவிஒடி சேவை பணப் பரிவர்த்தனை (ஒரு-திரைப்படத்திற்கு)  அடிப்படையில் சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களை முன்னதாகவே பார்ப்பதை இயன்றதாக்கும்; மற்றும் கூடுதலாக உலகெங்கிலும் இருந்து பிரபலமான திரைப்படங்களின் ஒரு செழுமையான கேட்டலாகை அளிக்கிறது. ப்ரைம் வீடியோவின் வாடிக்கையாளர் அடித்தடம்  மேலும் விரிவடையத் தயாராக உள்ளது , ஏனென்றால் டிவிஓடி வாடகை சேவை அனைத்து ப்ரைம் உறுப்பினர்களுக்கும் மற்றும் இன்னமும் ஒரு ப்ரைம் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும்  கிடைக்கும்.

 மும்பை, இந்தியா -28 ஏப்ரல், 2022- அமேசான் ப்ரைம் வீடியோ , இந்தியாவில் அதன் முதல் ப்ரைம் வீடியோ ப்ரெசெண்ட்ஸ் இண்டியா  காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சியில் , இந்தியாவில் இன்று வரையிலான அதன் மிகப் பெரிய பலகையை (ஸ்லேட்டை ) அறிமுகப்படுத்தி , அடுத்த 24 மாதங்களில் அது அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கும் ஒரிஜினல் தொடர்கள், ஒரிஜினல் திரைப்படங்கள் மற்றும் இணை-தயாரிப்புகள் இடையே  ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் 40 க்கு அதிகமான புதிய தலைப்புகளை இன்று அறிமுகப்படுத்தியது .

பல மொழிகளில் நுகர்வோர்களுக்கு சிறந்த மற்றும் சமீபத்திய திரைப்படங்களை கொண்டு வரும் அதன் யுக்தியை பலப்படுத்தும் வகையில் , ப்ரைம் வீடியோ புதிய பல வருட லைசென்சிங் டீல்கள் (தொழில் உரிமங்கள்) மற்றும்   இந்தியாவின் சில மிகப் பெரிய மற்றும் மிக வெற்றிகரமான ஸ்டூடியோக்களுடனான இணை-தயாரிப்புகளை அறிவித்தது . இந்த சேவையில் நேரடியாக வெளியிடப்படவிருக்கும் ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களுடன் இந்தியாவில் ஒரிஜினல் திரைப்பட தயாரிப்பை முன்னெடுப்பதையும் ப்ரைம் வீடியோ அறிவித்தது .

இந்த சேவை சமீபத்தில் இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேன்மையான-சேவை அளித்து அரை நூற்றாண்டை பூர்த்தி செய்திருக்கிறது, மற்றும் அடுத்த 5 வருடங்களில் ப்ரைம் வீடியோ இந்தியாவில் அதன் முதலீட்டை இரண்டு மடங்கை விட அதிகமாக்கும் என அறிவித்தது .

வரவிருக்கும் அமேசான் ஒரிஜினல்ஸ் , அதி நவீன த்ரில்லர்கள் முதல் , சக்தி வாய்ந்த அடிதடி திரைப்படங்கள், ஈடுபடுத்தும் நாடகங்கள் முதல் இதயத்தை லேசாக்கும் நகைச்சுவைகள் மற்றும் இதயத்தை கதகதப்பாக்கும் காதல் வரை  பலதரப்பட்ட வகைகளின் பரந்த ரகத்தை அளிப்பதன் மூலமாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும். இந்த சேவை இளம் பார்வையாளர்களுக்காக  அதன் ஒரிஜினல் ப்ரோக்ராமிங்கை பெருக்கிக் கொண்டிருக்கிறது , மற்றும் அதன் இந்திய பயணத்தில் முதல் முறையாக அமானுஷியம்  மற்றும் திகில் போன்ற வகைகளையும் ஆய்வு செய்கிறது . மேலும், ப்ரைம் வீடியோ வாழ்க்கை வரலாறு, நிஜ குற்றங்கள் மற்றும் புலனாய்வு ஆவண நாடகங்கள் போன்ற வகைகளை ஆய்வு செய்வதற்கு அதன் எழுதப்படாத (அன்ஸ்க் ரிப்டெட்)  தொடர் கேட்டலாகின் வாய்ப்புகளையும் ப்ரைம் வீடியோ மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.

ப்ரைம் வீடியோ திறமைக்கான ஒரு இடமாக இருப்பதற்கான குறிக்கோள் கொண்டுள்ளது. இது நாடெங்கிலும் தனித்தன்மையான, சினிமா சார்ந்த குரல்கள் கொண்ட பலதரப்பட்ட படைப்பாளிகளின் ஒரு பரவலான தொகுப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறது. வரவிருக்கும் புதிய தலைப்புகளில் ஏறக்குறைய 70% புதிய திறமைகளைக் கொண்டிருக்கும்- கேமராவின் முன்  மற்றும் பின் இரண்டிலும்

கடந்த வருடம் ப்ரைம் வீடியோ சேனல்களை அறிமுகப்படுத்திய பின், ஒரு வீடியோ பொழுதுபோகக்கு மார்கெட் இடத்தை உருவாக்குவதை நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க படியாக, அமேசான்  அதன் வீடியோ-ஆன்-டிமாண்ட் (தேவையின்படி அளிக்கப்படும் வீடியோ)  (டிவிஒடி) திரைப்பட வாடகை சேவையை ப்ரைம் வீடியோ ஸ்டோரையும் அறிமுகப்படுத்தியது,வாடிக்கையாளர்கள் இப்போது பணப் பரிவர்த்தனை (ஒரு-திரைப்படத்திற்கு)  அடிப்படையில் சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களையும் முன்னதாகவே பார்க்கலாம் , உலகெங்கிலும் இருந்து பிரபலமான திரைப்படங்களின் (விருது வென்றவை மற்றும் ஃப்ரான்ச்சைசிகளின்) ஒரு செழுமையான கேட்டலாகை உள்ளடக்கியுள்ளது. ப்ரைம் வீடியோவின் வாடிக்கையாளர் அடித்தடம்  மேலும் விரிவடையத் தயாராக உள்ளது , ஏனென்றால் டிவிஓடி வாடகை சேவை அனைத்து ப்ரைம் உறுப்பினர்களுக்கும், மற்றும் ஒரு ப்ரைம் உறுப்பினர் அல்லாத யாருக்கும் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அனைத்து மொழிகளிலும் முன்னதாகவே  திரைப்படங்களை வாடகைக்கு எடுத்து பார்க்கலாம் மற்றும் வாடகை சேவை ப்ரைம் வீடியோ. காம் மற்றும் ப்ரைம் வீடியோ ஆப்பில் ஸ்டோர் டேப் வழியாக பயன்படுத்தப்படலாம்.

“கடந்த 5 வருடங்களில் , நாங்கள் பல்வேறு மொழிகளில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட உள்ளடக்க விஷயங்களின் ஒரு பலம் வாய்ந்த பலகையை (ஸ்லேட்டடை) உருவாக்கியிருக்கிறோம் , இது இந்திய வாடிக்கையாளர்களின் பலதரப்பட்ட பொழுதுபோக்கு தேவைகளுக்கு மிகுந்த சேவை அளித்திருக்கிறது. அதிகரிக்கப்பட்ட பயன்பாடு மற்றும் விநியோகத்துடன், இந்த அற்புதமான கதைகள் இந்தியாவில், மற்றும் உலகெங்கிலும்  வெகு தொலைவாக மற்றும் பரவலாக பயணிப்பதற்கு உதவியிருக்கிறோம் . இந்திய வாடிக்கையாளர்களின் மொழி ரகத்தை விரிவுபடுத்த உதவுவதற்கு நாங்கள் ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கிறோம் , இதன் மூலமாக படைப்பாளிகள் மற்றும் திறமையுள்ளவர்களுக்கான  ஒரு பார்வையாளர் அடித்தளத்தை  அதிகரித்திருக்கிறோம். ப்ரைம் வீடியோ இண்டியா , இன்று நாட்டின் அஞ்சல் குறியீடுகளில்  99% -லிருந்து பார்வையாளர்களைப் கொண்டிருக்கிறது. உலகளவில் இந்தியா தொடர்நது மிக விரைவாக –வளர்ந்து வரும் மற்றும் மிகவும் ஈடுபட்டிருக்கும் உள்ளூர் சமூகமாக தொடர்ந்து இருந்து வருகிறது .எங்களுடைய நுகர்வோர்களிடமிருந்து நாங்கள் பெற்றிருக்கும் அன்பு எங்களை பணிவு மிக்கவர்களாக்கியிருக்கிறது மற்றும் அற்புதமான உள்ளடக்க விஷயங்களுடன் எங்களுடைய வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்கு நாங்கள் தொடர்நது ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் , அதே சமயத்தில் படைப்பாற்றல் பொருளாதாரத்திற்கும் உந்துதல் அளிக்கிறோம்,” என்று கூறினார் கௌரவ்  காந்தி கண்ட்ரி ஹெட்அமேசான் ப்ரைம் வீடியோ இண்டியா.

இந்தியாவில் திரைப்படங்கள் பிரிவை விரிவாக்கம் செய்வதில் பல-முனை  அணுகுமுறை பற்றி  பேசும் போது , கௌரவ் மேலும் கூறினார் “மிகவும்-விரும்பப்படும் பொழுதுபோக்கு மையமாக ஆவதற்கான எங்களுடைய தொலை நோக்குடன் இசையும் வகையில் , நாங்கள் எங்களுடைய நுகர்வோர்களுக்கு திரைப்படங்களை அளிக்கும் விதத்தில்  நிலையாக புதுமைகளைப் புகுத்தியிருக்கிறோம், தியேட்டருக்கு-பின் எர்லி-வின்டோவில் திரைப்படங்களை  (திருட்டு நகல் ஏற்படாத வகையில் முன் கூட்டியே வெளியிடுவது) அளிப்பது முதல் டைரக்ட்-டு சர்வீஸ் ப்ரீமியர்ஸ் (நேரடியாக ஓடீடீ தளங்களில் வெளியிடப்படுவது) வரை , நுகர்வோர்களின் வசிப்பறைகள் மற்றும் விரும்பப்படும் சாதனங்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களை கொண்டு வந்திருக்கிறோம்,  இந்த பிரிவை மேலும் வளர்ப்பதற்கு நாங்கள் ஆழமான அர்ப்பணிப்பு கொண்டுள்ளோம் மற்றும் எங்களுடைய திரைப்பட உரிமை (ஃபிலிம் லைசென்ஸிங்) பார்ட்னர்ஷிப்களில் பெரிய அளவில் செயல்பட இருக்கிறோம், எங்களுடைய இணை-தயாரிப்பு முயற்சிகளை விரிவு படுத்துகிறோம் மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களை முன்னெடுப்பதை  அறிவிப்பதற்கும் இப்போது மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறோம். அற்புதமான உள்ளடக்க விஷயங்களில் எங்களுடைய முதலீடுகளுடன் கூடுதலாக , டிவிஒடி திரைப்பட வாடகை சேவை (மூவி ரென்டல் சர்வீஸ்) அறிமுகம் குறித்தும் நாங்கள் மிகுதியான ஆர்வம் கொண்டுள்ளோம், அது இந்த திரைப்படங்களுக்கு மிக விரிவான பகுதிகளை சென்றடைவதற்கான வாய்ப்பளிப்பதோடு  மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் உள்ளடக்க விஷயங்களை எப்படி பயன்படுத்த மற்றும் பார்க்க விரும்புகிறார்கள் என்பதிலும் அதிக தேர்வை அளிக்கிறது.”

இன்று அறிவிக்கப்பட்ட விரிவடைந்து வரும் உள்ளடக்க விஷயங்கள் பலகை குறித்து விளக்குகையில், அபர்ணா புரோஹித் ஹெட் ஆஃப் இண்டியா ஒரிஜினல்ஸ் அமேசான் ப்ரைம் வீடியோ கூறினார் , “எங்களுடைய நோக்கம் அழுத்தமான, அசலான மற்றும் வேரூன்றிய கதைகளை சொல்வதாகவே இருந்திருக்கிறது  , இவை இந்திய நேயர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் உள்ள நேயர்களுடனும் எதிரொலிக்க வேண்டும்.  எங்களுடைய நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் புதிய வகை உதாரணமாக ஊக்கம் அளித்திருக்கிறது, புதிய பாதையை வகுத்திருக்கிறது , மற்றும் நிஜத்தில் கலாச்சார யுகத்தின் ஒரு பகுதியாகியிருக்கிறது. நாங்கள்  முன்னேறிச் செல்கையில், எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு  வெவ்வேறு வடிவங்கள், வகைகள் மற்றும் மொழிகளில் சக்தி வாய்ந்த கதைகளைக் கொண்டு வருவதற்கு மிக செழிப்பான படைப்பாளிகள் சிலருடன் இணைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளோம். எங்களுடைய வரவிருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் பலகை , மொழி , தேசியம் அல்லது வடிவங்களின் அனைத்து தடைகளையும் கடந்து செல்லும் என நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

வரவிருக்கும் தலைப்புகள் மற்றும் அறிவிக்கப்பட்ட பார்ட்னர்ஷிப்கள் பற்றிய விவரங்கள் இணைப்பு ஆவணத்தில் தனியாக சேர்க்கப்பட்டுள்ளது