full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

ஜீ5 தளத்தில் உலகமெங்கும், பிரமாண்ட வரவேற்பில், இந்தியாவின் மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படம்!

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பொழுதுபோக்கு திரைப்படம் – ஜூனியர் என்டிஆர் & ராம் சரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த, எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்”,  திரைப்படம் மே 20, 2022 முதல் ஜீ5 தளத்தில் திரையிடப்பட்டது, இப்படம் தற்போது 1000 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து  (தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம்) நான்கு மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கூறும்போது,
நீங்கள் அனைவரும் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தின்  மீது காட்டும் அன்பிற்கு  மிகுந்த நன்றி. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்திற்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. உங்கள் மகத்தான வரவேற்பை கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
நடிகர் ராம் சரண் கூறும்போது,

ஜீ5 இல் வெளியாகியுள்ள “ஆர் ஆர் ஆர்” மீதான ரசிகர்களின் காதலை கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்!, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து  காத்திருந்த  நிலையில், இப்போது ரசிகர்கள் கொண்டாடுவது மிகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

பிரபல கலைஞர்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் ஈடுபாட்டை உள்ளடக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” அதன் பிரம்மாண்டமான திரைப்படத் தயாரிப்பு பாணி மற்றும் அருமையான காட்சிகள் மூலம் சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்தது. இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் ஜீ5 இல் இப்படத்தின் ஓடிடி பிரீமியர் வெற்றியின் மராத்தான் இன்னும் தொடர்கிறது.

ஜீ5 தளமானது தமிழ் ஓடிடி உலகில், சிறந்த உள்ளடக்கத்தைத் தேர்ந்தெடுத்து பார்வையாளர்களுக்குப் பரிசளிப்பதில் முன்னணியில் உள்ளது. அதன் அசல் தொடர்களான, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘விலங்கு, அனந்தம், கார்மேகம்’ போன்ற தொடர்களுடன் அசத்தலான படங்கள் மற்றும் வணிகரீதியான பிளாக்பஸ்டர்களுடன், இது பொழுதுபோக்கு ஆர்வலர்களின் தவிர்க்க முடியாத விருப்பமாக மாறியுள்ளது.