மாலா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். 1999 இல், சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் தனது கணவர், இரு குழந்தைகள், மற்றும் லாப்ரடோர், மேஜிக் உடன் வசிக்கிறார்.
அவர் 2000 களின் முற்பகுதியில் “History of Painting for Young Readers” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டு, ‘Art Beat’ for Young World – the children’s supplement என்னும் The Hindu செய்திதாளின் பத்தியில் பங்காளித்துள்ளார். அதுமட்டுமின்றி நிறுவனங்களின் செய்திமடல்கள், விளம்பரகளிலும் பங்களித்துளார்
பத்மா அவரது இரண்டாவது நாவல் மற்றும் அவரது முதல் இலக்கிய புனைகதை.மாலா, தனது கணவருடன் அவர்களுக்குச் சொந்தமான கப்பல் மற்றும் தளவாடங்கள் நிறுவனத்திலும், Transworld Group சிங்கப்பூர்-லும் பணியாற்றுகிறார், மற்ற ஆர்வங்கள் Event planning (தொண்டு மற்றும் வணிகரீதியாகவும்), நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடனம், மற்றும் கோல்ஃப் ஆகியவற்றை குறிப்பாக ஆரோக்கியமான மற்றும் பொருத்தமான வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது.
எழுத்தாளர் மாலா மகேஷுடன் கேள்வி பதில்
இந்த புத்தகத்தை இப்பொழுது எழுதத் தூண்டியது எது?
இந்த புத்தகத்திற்கான முதல் வரைவை நான் நீண்ட காலத்திற்கு முன்பே எழுதிவிட்டேன், ஆனால் வேலை மற்றும் பிற முன்னுரிமைகளின் காரணத்தினால் தொடர முடியவில்லை. மே மாதம் 2020 இல், இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்குத் தயாராகும் வகையில், எழுத்தம்-திருத்தம் ஆகியவற்றை முடிக்க ஒரு புதிய கவனத்துடன் இந்தப் புத்தகத்தை மீண்டும் தொடங்கினேன்.
இந்த subject matter உங்களுக்கு ஆர்வமாக இருந்ததன் காரணம் என்ன?
என் பாட்டி, குழந்தையின்மை பிரச்சினையில் உள்ள சில உண்மை சம்பவங்களை என்னிடம் கூறினார். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை, ஒரு பெண்ணின் மதிப்பு குழந்தைகளைப் பெற்றெடுக்கும் திறனைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றிற்காக குற்றம் சாட்டப்பட்டும் மற்றும் அவமானப்படுத்தப்பட்டும் வருகின்றனர். தம்பதியினருக்கு இடையே, பிரச்சனை ஆண்களிடம் இருக்கலாம், ஆனால் அவர்கள் அந்த உண்மையை ஏற்க மறுப்பார்கள். இந்த நிலைக்கு பெண்கள் மீது பழி சுமத்துவது நியாயமற்றது! இதை நான் உணர்ந்தேன், மேலும் இந்த சூழ்நிலை ஒரு பெண்ணின் உணர்வுகள், மனநிலை மற்றும் குடும்பத்தை எவ்வாறு பாதிக்கலாம் என்று ஒரு கதையை எழுதினேன்.
ஏன் இரண்டு பெண்களுக்கு நடுவே இத்தனை வருட இடைவெளியை தேர்ந்தெடுத்தீர்கள்?
மலட்டுத்தன்மையைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் முன்பு போலவே இப்போதும் பரவலாக உள்ளது. அதனால் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களைப் பயன்படுத்துவது மூலம் அன்றிலிருந்து இன்றுவரை அதன் ஒப்பீடுகள் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்தேன்.
ஏன் இந்த பிரச்சினை பற்றி பேச தயங்குகிறார்கள் ?
ஒருவேளை உண்மையில் அது புரியாததனால் இருக்கலாம். மக்கள் தங்கள் உடல் மற்றும் அதன் பிரச்சனைகளைப் பற்றி, குறிப்பாக மற்றவர்களுக்கு முன்னால் பேசுவதற்கு கூச்சமாக/சங்கடமாக உணர்கிறார்கள். பல தலைமுறைகளாக, பிள்ளைப்பேறு இயற்கையில் பெண்களுக்கு வருவதாக சமூகம் நம்புகிறது. எனவே, உங்கள் குடும்பத்தினரும் நண்பர்களும் எளிதில் செய்யக்கூடியதை உங்களால் செய்ய முடியவில்லை என்பதால், நீங்கள் அதற்கு தகுந்தவர் இல்லை என்ற உணர்வு உள்ளது.
இது சிந்தனை குறைவா அல்லது புரிதலின்மையா ?
புரிதலின்மை என்றே கூறுவேன். குழந்தை பிறப்பைச் சுற்றியுள்ள சிரமங்கள் மிகவும் பொதுவானவை என்பதை பலர் உணரவில்லை. மேலும், இந்த பிரச்சனைகள் ஒரு பெண் அல்லது ஆண் தேர்ந்தெடுத்த சில வாழ்க்கை முறைகளின் விளைவாக இல்லை.
இது நவீனகாலத்து பெண்களை எவ்வாறு பாதிக்கிறது?
இன்னும் இந்த விஷயத்தை பற்றி பலர் வெளிப்படையாகப் பேசாததால், இந்த பிரச்சனை உள்ள பெண்கள் தனிமையில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் தனிமை மற்றும் அவமான உணர்வு, நியாயமற்றது, தாங்கமுடியாத ஒரு பெரும் சுமை
இதற்கு தீர்வு ஏதேனும் உங்களிடம் உள்ளதா?
பெரும்பாலும் இத்தகைய பிரச்சனைகள் ஆணாதிக்கத்தில் உள்ள முன்முடிவுகளால் ஏற்படுகின்றன. எனவே, ஒரு நேரடியான தீர்வு மழுப்பலாகத் தெரிகிறது. நீங்கள் விரும்புவதைப் பற்றி நீங்கள் உங்களுடன் நேர்மையாக இருப்பது உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். பின்னர் அதை உங்கள் துணை, குடும்பம், நண்பர்கள் அல்லது நீங்கள் வசதியாக உணர்ந்தால், ஒரு சிகிச்சையாளரிடம் பேசுங்கள். இது தனிமை மற்றும் சுய சந்தேகத்தை போக்க உதவும். இது முற்றிலும் என்னுடைய பார்வை.
இந்தப் பிரச்சனையை எப்படி சமாளிப்பது?
குழந்தை பெற்றுக் கொள்வதா இல்லையா என்பது மிகவும் தனிப்பட்ட முடிவு. இதற்கு சரி – தவறு என்று பதில் இல்லை. எந்த முன்முடிவும் இல்லாமல் பெற்றோர் மற்றும் சமூகம் அளிக்கும் வழிகாட்டுதலும் ஆதரவும்தான் இந்தச் சிக்கலை சமாளிப்பதற்கான சிறந்த வழியாக இருக்கும்.
இந்தப் புத்தகம் வெளிவருவதற்கு உங்களுக்கு வேறு யாராவது உதவி செய்தார்களா?
எனது கணவர் மகேஷ், எனது குழந்தைகள் மிதிலா, முரளி மற்றும் எனது மருமகன் அஜய் ஆகியோரின் ஆதரவையும் வழிகாட்டுதலையும் பெற்றதற்கு நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
எனது புத்தகத்தில் உள்ள சில விதிமுறைகள் மற்றும் உள்ளடக்கம் துல்லியமாக சரிபார்க்கப்பட வேண்டும், அதற்கு உதவிய மருத்துவ உளவியலாளர் மிதிலா, வழக்கறிஞர்-பயிற்சி யில் இருக்கும் முரளி மற்றும் மருத்துவரான எனது மைத்துனர் சுமித்ரா ஆகியோரிகளின் மதிப்புமிக்க ஆலோசனைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
பாரம்பரிய கேரள கட்டிடக்கலை பற்றிய தகவல்கள் மற்றும் எனது கதையின் அமைப்பு, வேகம் குறித்த கருத்துக்களை சில நெருங்கிய நண்பர்களிடமிருந்தும் பெற்றுள்ளேன்.